முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் அஜித்திடம் உதவி கேட்டு கண்ணீர் விடும் நடிகர் தீப்பெட்டி கணேசன்!

அஜித்திடம் உதவி கேட்டு கண்ணீர் விடும் நடிகர் தீப்பெட்டி கணேசன்!

ரேணிகுண்டா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து பாப்புலர் ஆனவர் . அதற்கு பிறகு அஜித்தின் பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா செய்யும் பணியில் இருந்தார். தனது மேனேஜர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறினார் அவர்.

தொடர்ந்து வறுமையில் வாடி வரும் அவருக்கு தற்போது கொரோனா லாக்டவுனில் எந்த வித வருமானமும் இல்லாததால் அவரது குடும்பம் வாடி வந்தது. அவருக்கு நடிகர் விஷால் தரப்பில் சமீபத்தில் ஒரு மாதத்திற்கான மளிகை சாமான் அனுப்பிவைக்கப்பட்டது. அதற்க்கு நன்றி கூறி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் அவர்.

தற்போது அவர் மேலும் ஒரு பேட்டியில் பேசும்போது தல அஜித்திடம் உதவி கேட்டு கண்ணீர் விட்டுள்ளார். அஜித்தை சந்திக்க பல முறை முயற்சி செய்தேன். ஆனால் அவரை சுற்றி இருப்பவர்கள் என்ன விடவில்லை என கூறியுள்ளார்.

“என்னுடைய உண்மையான பெயர் கார்த்திக். ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் தீப்பெட்டி கணேசன் என்று தான் கூப்பிடுவார்கள். நான் எவ்வளவோ படங்கள் நடித்துவிட்டேன், ஷூட்டிங் ஸ்பாட்டில் கார்த்திக் என என் பெயரை கூப்பிட்ட ஒரே கடவுள் சார் மட்டும் தான். ஏகப்பட்ட முறை அவரிடம் உதவி கேட்பதற்காக முயற்சித்தேன். அவரை ஒருமுறையாவது பார்த்துவிட முடியுமா என பல முறை முயற்சித்தேன். அஜித் சார் பார்த்தால் என் குழந்தைகளுக்கு எதிர்காலம் கிடைக்கும். இதுபற்றி அறிந்தால் அடுத்த நொடியே அஜித் கூப்பிட்டுவிடுவார். ஆனால் இதை யாரும் அவரிடம் கொண்டு சேர்ப்பதில்லை” என பேசியுள்ளார் அவர்.

இதை பார்த்த நடிகர் லாரன்ஸ் இந்த வீடியோவை அஜித் சாரின் மேனேஜருக்கு அனுப்பி இருப்பதாக கூறியுள்ளார்.

“அஜித் இரக்க குணம் கொண்டவர், நிச்சயம் உதவுவார். உங்கள் குழந்தைகளில் கல்விக்கு நானும் உதவுகிறேன்|” என லாரன்ஸ் கூறியுள்ளார்.

Must Read

இன்னும் சில மணி நேரங்களில் இருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் விபரங்கள்

இன்று(06) இலங்கை நேரப்படி மதியம் 3 மணி முதல், தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பிக்கும். உடனுக்கு உடன் வெற்றிபெற்றவர்கள் யார் என அறிந்து கொள்ள அதிர்வு செய்திகளோடு இணைந்திருங்கள். நாம் உடனுக்கு உடன்...

துறைமுக கிடங்கில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததே காரணம் பெய்ரூட் குண்டுவெடிப்பு பலி 100 ஆனது: 4,000 பேர் படுகாயம்; வீடுகள் மீது உடல் பாகங்கள்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 4,000க்கும் மேற்பட்டோர்காயம் அடைந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில்...

ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்று பெரிய கொண்டாட்டங்களில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 20 அகவை இளைஞன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை தொற்று பலருக்கு இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களோடு நெருங்கிய தொடர்பில்...

வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, வுகான் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாங்னான் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனாவில் இருந்து மீண்ட...

கொரோனா கதியில் இருந்து மீண்டதா? இன்னமும் திணறுகிறது அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு

நியூயார்க்: மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்று அதிபர் டிரம்ப் என்னதான் சொன்னாலும், உண்மையில் நிலைமை வேறாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது...