முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் அஜித் பிறந்தநாள்! ரசிகர்களின் பிரம்மாண்ட பிளான், ஒன்றுசேரும் 14 பிரபலங்கள்

அஜித் பிறந்தநாள்! ரசிகர்களின் பிரம்மாண்ட பிளான், ஒன்றுசேரும் 14 பிரபலங்கள்

நடிகர் அஜித்துக்கு மே 1ம் தேதி என்பதால் அவரது ரசிகர்கள் அதை கொண்டாட தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

வழக்கமாக நடிகர்களின் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் காமன் டிபி வெளியிடுவது வழக்கம். அது போல அஜித்தின் பிறந்தநாள் காமன் டிபியை வரும் 26ம் தேதி வெளியிடவுள்ளனர்.

அதற்காக பிரம்மாண்ட ஒரு ஏற்பாட்டை செய்துள்ளனர் ரசிகர்கள். தமிழ் சினிமாவில் பிரபலமான 14 பிரபலங்கள் ஒன்று சேர்ந்து சமூக வலைத்தளங்களில் அதை வெளியிடவுள்ளனர்.

ஹன்சிகா, அருண் விஜய், தமன், பிரியா ஆனந்த், ராகுல் தேவ், பார்வதி நாயர், சதிஷ் சிவலிங்கம், பிரேம்ஜி, ரைசா வில்சன், நிதி அகர்வால், யாஷிகா ஆனந்த், ஆதவ் கண்ணதாசன், ஆர்த்தி, சாந்தனு ஆகிய 14 பேரும் 26ம் தேதி மாலை 5 மணிக்கு காமன் டிபியை வெளியிடவுள்ளனர்.

இதை நடிகர் சாந்தனு ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, அஜித் தற்போது நடித்துவரும் வலிமை படத்தின் அப்டேட் எதாவது மே 1ம் தேதி வெளிவருமா என்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. லாக்டவுன் முடிந்தபிறகு தான் அது மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள வலிமை அடுத்த வருடம் பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆகும் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உலா வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Must Read

வாழ்த்துங்களேன்!

14.7.20 முதல் 27.7.20 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத...

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...

லண்டனில் 24 ம் திகதியோடு அமுலுக்கு வரும் கட்டாய முகக் கவசம்- மீறினால் FINE

பிரித்தானியாவில் இம்மாதம்(ஜூலை) 24 தொடக்கம் கட்டாய நடை முறை ஒன்று அமுலுக்கு வருகிறது. சூப்பர் மார்கெட் தொடக்கம், சிறு கடைகள், உணவங்கள் என்று மக்கள் கூடும் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் கட்டாய...