முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் அடகுவைத்த கடையிலேயே ஆட்டையப் போட்ட அரிவாள் ஆசாமி!

அடகுவைத்த கடையிலேயே ஆட்டையப் போட்ட அரிவாள் ஆசாமி!

குமரன் சாலையில் அமைந்துள்ள பிரபல நகை அடகு கடையில் இரண்டு தினங்களுக்கு முன் துணிகர நகைப் பறிப்புச் சம்பவம் நடைபெற்றது.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி . இங்கு வடக்கு காவல் நிலையம், குற்றவியல் நீதிமன்றம் ஆகியவையும் அமைந்துள்ளன. இந்த பகுதியில் அமைந்துள்ள பிரபல நகை அடகுக் கடையில் இரு தினங்களுக்கு முன் ஹெல்மட் அணிந்தபடி மர்ம நபர் உள்ளே நுழைந்தார்.

அதன்பின் அவர் மறைத்து வைத்த அரிவாளை எடுத்து ஊழியர்களை மிரட்டியுள்ளார். பின் கடையில் இருந்த 10 சவரன் நகை, 20,000 ரூபாய் ரொக்கம் ஆகியவையை பறித்துக் கொண்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

இந்தக் காட்சிகளை காவல் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மர்ம நபர் குறித்து தற்போது முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நகைப் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அழகுவேல் என்பது தெரியவந்துள்ளது. அந்த நகைகளை இந்த கடையில் அடகு வைத்துள்ளார்.

தற்போது போலீஸார் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Must Read

யாழ் விடத்தற்பளை முகாமில் 51 கடற்படையினருக்கு கொரோனா: யாழ் மக்கள் அச்சம்

யாழ். கொடிகாமம் விடத்தற்பளை முகாமில் தனிமைப் படுத்தப்பட்ட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த 51 பேரும் கடற்படை சிப்பாய்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமில் 260 கடற்படை சிப்பாய்கள்...

உள்பக்கமாக பூட்டி பதுங்கிய அமெரிக்க பொலிசார்: வெடித்தது பெரும் கலவரம்

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியாகிய வீடியோ, இன்று அமெரிக்காவில் பெரும் கலவரத்தை உண்டாகியுள்ளது. கறுப்பின நபர் ஒருவரை வெள்ளையின பொலிசார் கைது என்ற போர்வையில் காலல் நசுக்கி கொலை செய்து இருந்த...

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் திமுகவினரின் மதுபான ஆலைகளும் மூடப்படும்: டி.கே.எஸ். சாமர்த்திய பதில்!!

எம்.பி.யான டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் குழு, தமிழக தலைமைச் செயலாளரை சமீபத்தில் சந்தித்தனர். திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ஒரு லட்சம்...

ப்ளஸ்2 மாணவர்களுக்கு போனஸ் மார்க், தேர்வுத்துறை உத்தரவு!

தமிழ்நாட்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட ஒரு பிழைக் காரணமாகக் குறிப்பிட்ட மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம்...

திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல – தேவஸ்தான நிர்வாகம் முடிவு

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக அளித்த 50 சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து...