முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் அடிச்சு வெளுக்கப் போகும் மழை! எந்த ஊருக்கெல்லாம் தெரியுமா?

அடிச்சு வெளுக்கப் போகும் மழை! எந்த ஊருக்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், திண்டுக்கல், சேலம், திருப்பூர், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்யும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி, மதுரை, நீலகிரி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், சேலம், வேலூர், திருத்தணி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் ஓட்டி பதிவாக கூடும். இதனால் அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், மாலை நேரங்களில் தெளிவாகவும் காணப்படும். அதிகபட்சமாக வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சில பகுதிகளில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மதுரையில் 5 சென்டி மீட்டர் மழையும், தேவகோட்டையில் 4 சென்டிமீட்டர் மழையும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிவலோகம் ஆகிய பகுதிகளில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. வால்பாறையில் 2 சென்டி மீட்டர் மழையும், தாளவாடியில் ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Must Read

தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து, 2019ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி...

இங்கிலாந்து தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு: ஹோல்டர் கேப்டன்!

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு முதல் சர்வதேச டெஸ்ட் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. , மேற்கிந்திய அணிகள் பங்கேற்கும் இந்த டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் வரும் ஜூலை 8ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில்...

ஆன்லைன் வீடியோக்களை அதிகமாகப் பார்க்கும் இந்தியர்கள்!

இந்திய மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப நாளுக்கு போன்களின் எண்ணிக்கையும் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. குறைந்த விலைக்கு ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதாலும் குறைந்த கட்டணத்தில் டேட்டா சேவைகள் வழங்கப்படுவதாலும் ஸ்மார்ட்போன்களில் அதிக நேரத்தை...

குடும்ப அட்டைதாரர்களுக்கு 7500 ரூ: திருநாவுக்கரசு கோரிக்கை!

மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கட்சி சார்பாக கொரானா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு நலிவடைந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். தொடர்ந்து...

விரைவில் சர்வதேச விமான போக்குவரத்து? வெளிநாட்டவர்களுக்கு மத்திய அரசு அனுமதி!

பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து எப்போது தொடங்கப்படும் என்ற...