முகப்பு சினிமா `அடுக்குமாடி குடியிருப்பை பதறவைத்த இரட்டைக்கொலை’ - வயதான தம்பதி மரணத்தில் சிக்கிய மருமகள்

`அடுக்குமாடி குடியிருப்பை பதறவைத்த இரட்டைக்கொலை’ – வயதான தம்பதி மரணத்தில் சிக்கிய மருமகள்

கொரோனா ஊரடங்கு காரணமாகக் கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் குறைந்திருக்கிறது என்ற தகவல்கள் ஆறுதலை அளித்தாலும். ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரித்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சிகரமாக இருக்கின்றன.

இந்நிலையில் குடும்பப் பிரச்னை காரணமாக டெல்லியில் வயதான தம்பதியினர் கொலை செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் மருமகளே இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது.

Representation image

மேற்கு டெல்லியில் வசித்து வந்த ராஜ்சிங் (61), ஓம்வதி (58) ஆகிய இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாகக் கிடப்பதாகத் துர்கா விஹார் பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்களிடம் காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

Also Read: `கணவர் உடலைக்கொண்டு வர பணமில்லை; வைக்கோல் பொம்மை மூலம் இறுதிச்சடங்கு’- கலங்கும் உ.பி பெண்

இந்த வயதான தம்பதியினருடன் அவரது மகன் சுரேஷ் மருமகள் கவிதா மற்றும் இரண்டு பேரக்குழந்தைகள் வசித்து வந்தது தெரியவந்தது. குடும்பத்தினர் மாயமானதால் போலீஸாரின் சந்தேகம் அவர்களது பக்கம் திரும்பியது. வயதான தம்பதியின் முகத்தில் கத்தியால் குத்திய காயங்கள் இருந்துள்ளன. கழுத்து இறுக்கப்பட்டு இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

Representation image

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருமகள் கவிதாவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் இருவரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சொத்து தகராறில் இந்தக் கொலை நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Also Read: `வீதியில் வைத்து மூதாட்டி சுட்டுக்கொலை!’ – அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சிகள்

இதுகுறித்து பேசியுள்ள காவல்துறை அதிகாரிகள், “இன்று காலை 11 மணியளவில் துர்கா விஹார் பகுதி மக்கள் வயதான தம்பதியினர் கொலை செய்யப்பட்ட தகவலைத் தெரிவித்தனர். இதையடுத்து அந்தப் பகுதிக்கு காவல்துறையினர் விரைந்தனர். அந்த வீட்டில் இருந்த ஒரு அறையில் வயதான தம்பதியினர் இருவரும் சடலமாக இருந்தனர். அவர்களது சடலம் கட்டிலின் மீது இருந்தது. முகத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய காயம் இருந்தது. நெருங்கிய உறவினர்களால் இந்தக் கொலை நடந்திருக்கும் எனச் சந்தேகித்தோம்.

Representation image

அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் வயதான தம்பதியின் மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் இருந்தது தெரியவந்தது. நாங்கள் சென்றபோது அவர்கள் மாயமாகி இருந்தனர். தற்போது அவரின் மருமகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். உணவில் விஷம் கலந்து கொடுத்து அதன் பின்னர், கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே முழுமையான விவரங்கள் தெரிய வரும்” என்றனர்.

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...