முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் அட்லீயின் ‘அந்தகாரம்’ முழு படத்தை பார்த்த லோகேஷ் கனகராஜ்! என்ன விமர்சனம் கூறியுள்ளார் பாருங்க

அட்லீயின் ‘அந்தகாரம்’ முழு படத்தை பார்த்த லோகேஷ் கனகராஜ்! என்ன விமர்சனம் கூறியுள்ளார் பாருங்க

கைதி படத்தில் வில்லனாக நடித்த நடித்துள்ள படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது. இயக்குனர் அட்லீயின் தயாரிப்பு நிறுவனம் தான் இந்த படத்தினை வெளியிடுகிறது.

அந்தகாரம் ட்ரைலரை பார்த்துவிட்டு பல பிரபலங்கள் பாராட்டினர். பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் இதனை ட்விட்டரில் பாராட்டி தள்ளியிருந்தார்.

தற்போது அந்தகாரம் முழு படத்தையும் மாஸ்டர் பட இயக்குனர் பார்த்தாராம். அவர் அது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“அந்தகாரம் திரைப்படத்தை பார்க்கும் சிறப்பான வாய்ப்பு கிடைத்தது. இப்படி ஒரு பிரில்லியண்ட் படத்தை நான் சமீபத்தில் எதுவும் பார்க்கவில்லை. விக்னராஜன் (இயக்குனர்) உங்களின் கதை கூறும் விதத்திற்கு நான் ரசிகன் ஆகிவிட்டேன். அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் நடிப்பில் மிரட்டியுள்ளனர். வாழ்த்துக்கள் . உங்கள் கையில் ஒரு வெற்றி படம் இருக்கிறது” என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

விஜய் நடிப்பில் மாஸ்டர் என்ற மெகா பட்ஜெட் படத்தினை இயக்கி முடித்துள்ள லோகேஷ் கனகராஜ் அந்தகாரம் படத்தினை பாராட்டி இருப்பது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பிகில் படத்திற்கு பிறகு அட்லீ தற்போது வரை தனது அடுத்த படத்தை அறிவிக்காமல் இருக்கிறார். அட்லீ அடுத்து ஷாருக் கான் நடிப்பில் ஒரு படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார் என கூறப்படுகிறது. இருப்பினும் அதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.இருப்பினும் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலமாக அந்தகாரம் படத்தினை மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Must Read

முள்ளிவாய்க்காலை கூட்டாக நினைவுகூர்தல் இனப்படுகொலைக்கான நீதிக்கு வலுச் சேர்க்கும் (Video)

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11 ஆவது ஆண்டு நினைவு கூர்தல் வடகிழக்கு தமிழ்மக்களின் தாயக பிரதேசங்களிலும் புலம்பெயர் நாடுகளிலும் மிகவும் அக்கறையோடு அனுட்டிக்கப்பட்டது. இந்த முள்ளிவாய்க்கால் தினம் பல வகைகளில் முக்கியத்துவம்...

சீன பொருட்கள் புறக்கணிப்பா? உண்மை நிலவரம் என்ன?

கொரோனா தொற்று முதன்முதலில் சீனாவில் பரவியதால் இந்தியாவில் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் சிலர் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்திய-சீன எல்லையில் இருதரப்பு ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் சீன...

பள்ளிகள் திறப்பு எப்போது? உத்தேச தேதிகளை வெளியிட்ட மாநில அரசு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்து வரும் சூழலில்...

அவசரக் கடன்: வாரி வழங்கிய ஸ்டேட் பேங்க்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்காக அவசரக்கால கடன் உத்தரவாதத் திட்டம் மத்திய அரசால் சென்ற மாதம்...

10,11,12 வகுப்பு மாணவர்களே.. ஹால் டிக்கெட் வாங்க ரெடியாகிடுங்க!!

பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்களது பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட்களை பெறலாம், www. dge.tn.gov.in என்று இணையதளத்திலும் மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து...