முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் அதே ரத்தம் அப்படித் தான் இருக்கும்: த்ருவ் விக்ரம் வீடியோவை பார்த்தீங்களா?

அதே ரத்தம் அப்படித் தான் இருக்கும்: த்ருவ் விக்ரம் வீடியோவை பார்த்தீங்களா?

சீயான் விக்ரமின் மகன் த்ருவ் அப்பா வழியில் நடிகராகிவிட்டார். அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்யா வர்மா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் த்ருவ். அந்த படம் பெரிதாக ஓடாவிட்டாலும் த்ருவ் விக்ரமின் நடிப்பை பார்த்து பாராட்டாதவர்களே இல்லை.

முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அம்சமாக நடித்திருக்கிறார் த்ருவ் என்று பலரும் பாராட்டினார்கள். இதை பார்த்த த்ருவோ, இந்த பாராட்டுக்கள் அனைத்தும் அப்பாவை தான் சேரும் என்று அடக்கமாக கூறினார்.

இந்நிலையில் உன்னாலே உன்னாலே படத்தில் வந்த சிறு சிறு உறவுகள் பாடலை பாடி அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் த்ருவ்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ, அதே ரத்தம் அப்படித் தான் இருக்கும் என்கிறார்கள். விக்ரம் நடிப்பதில் மட்டும் அல்ல பாடுவதிலும் வல்லவர் தான். அப்பா வழியில் மகனுக்கும் பாட்டு பாடும் திறமை இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

முன்னதாக விக்ரமின் பிறந்தநாளுக்கு அவர் நடித்த பல படங்களின் காட்சிகளை தொகுத்து வீடியோவாக வெளியிட்டு ஹேப்பி பர்த்டே சீயான் என்று வாழ்த்தியிருந்தார் .

அப்பாவும், மகனும் நண்பர்களாக பழகுவதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆதித்யா வர்மா படம் ரிலீஸாகும் வரை த்ருவுடனேயே இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டார் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.

Must Read

தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து, 2019ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி...

இங்கிலாந்து தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு: ஹோல்டர் கேப்டன்!

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு முதல் சர்வதேச டெஸ்ட் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. , மேற்கிந்திய அணிகள் பங்கேற்கும் இந்த டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் வரும் ஜூலை 8ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில்...

ஆன்லைன் வீடியோக்களை அதிகமாகப் பார்க்கும் இந்தியர்கள்!

இந்திய மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப நாளுக்கு போன்களின் எண்ணிக்கையும் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. குறைந்த விலைக்கு ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதாலும் குறைந்த கட்டணத்தில் டேட்டா சேவைகள் வழங்கப்படுவதாலும் ஸ்மார்ட்போன்களில் அதிக நேரத்தை...

குடும்ப அட்டைதாரர்களுக்கு 7500 ரூ: திருநாவுக்கரசு கோரிக்கை!

மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கட்சி சார்பாக கொரானா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு நலிவடைந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். தொடர்ந்து...

விரைவில் சர்வதேச விமான போக்குவரத்து? வெளிநாட்டவர்களுக்கு மத்திய அரசு அனுமதி!

பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து எப்போது தொடங்கப்படும் என்ற...