முகப்பு சினிமா ’அப்பா... என்னை காப்பாற்றுங்கள் என்றாள்’ -குருத்துவாரா தாக்குதலில் உறவுகளை இழந்து தவிக்கும் ஹரிந்தர்

’அப்பா… என்னை காப்பாற்றுங்கள் என்றாள்’ -குருத்துவாரா தாக்குதலில் உறவுகளை இழந்து தவிக்கும் ஹரிந்தர்

அப்பா… காப்பாற்றுங்கள் எனக் கத்திக்கொண்டே என் மகள் கீழே விழுந்தால். ஆப்கானிஸ்தான் என்னுடைய நாடு என நினைத்திருந்தேன். ஆனால்…? ஹரிந்தர் சிங்கின் வார்த்தையில் தடுமாற்றம் ஏற்படுகிறது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்துவாராமீது கடந்த சில நாள்களுக்கு முன்பு தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 27 பேர் பலியானார்கள்.

தீவிரவாதிகள்

இந்தத் தாக்குதலில் ஹரிந்தரின் கண் முன்பே அவரது நான்கு வயது மகள் தன்யா, மனைவி மற்றும் தந்தை நிர்மல் சிங் ஆகியோரை துப்பாக்கி தோட்டாக்களுக்குப் பறிகொடுத்தார். அவரது தாய் மற்றும் உறவினர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Also Read: `குருத்துவாரா தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான்?’ -ஐ.எஸ் பொறுப்பேற்பில் கேள்வியெழுப்பும் இந்தியா

குருத்துவாரா தாக்குதலின் போது அவரது மற்ற இரண்டு குழந்தைகளும் நான்கு சகோதரர்களும் அங்கு இல்லை. குருத்துவாரா சம்பவம் தொடர்பாக ஆங்கில ஊடகமான தி இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளார். அதில், “இன்னும் சில தினங்களில் என் மகள் தன்யாவுக்கு நான்காவது பிறந்தநாள் கொண்டாட இருந்தோம். அவள் கேக் வெட்ட வேண்டும் என்று கேட்டிருந்தாள். இப்போது என் தாய், சகோதரர்கள் கொல்லப்படுவதற்கு முன்பு இந்த நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை.

Representation image

குருத்துவாராவில் எப்போதும் 6.30 மணிக்கு வழக்கமான வழிபாடு இருக்கும். அங்கு 100க்கும் அதிகமான பக்தர்கள் திரண்டிருந்தனர். பிரார்த்தனை நடந்துகொண்டிருக்கும் போது திடீரென சிலர் திருடர்கள் வந்துவிட்டார்கள் எனக் கூச்சலிட்டனர். துப்பாக்கிகளுடன் குருத்துவாராவுக்குள் வந்த நபர்கள் அங்கிருந்தவர்கள் நோக்கிச் சுடத்தொடங்கினர்.

நான் மேடையில் இருந்தேன். என் உறவினர் கீழே உட்காரு எனக் கூச்சலிட்டார். நான் அமர்ந்தபோது என் மனைவியும் மகளும் என் மீது அப்படியே சரிந்தனர். என் மகளின் தலையில் குண்டு துளைத்தது. அவள் கீழே விழும்போது அப்பா என்னைக் காப்பாற்றுங்கள் எனக் கதறிக்கொண்டே விழுந்தாள். என் மனைவி மற்றும் தந்தைக்கு மார்பில் குண்டுகள் துளைத்தன.

Representation image

இந்தத் தாக்குதலில் இங்கிருக்கும் மக்கள் தங்களது உறவினர்களை இழந்துள்ளனர். பயங்கரவாத தாக்குதலில் உறவினர்களை இழக்காத குடும்பங்களே இல்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது இங்கிருந்து வெளியேறவே விரும்புகிறார்கள். இதற்கு முன்பாக ஆப்கானிஸ்தான் என்னுடைய நாடு என உணர்ந்தேன். ஆனால் இப்போது நான் அப்படி நினைக்கவில்லை. நான் இங்கு வாழவே விரும்பவில்லை” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Must Read

இந்தியாவில் இளைஞர்களைக் குறிவைக்கிறது கொரோனா… அரசு ஆய்வுகளே ஆதாரம்…

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போதும் சமூக தொற்றாக மாறவில்லை என்றும் அதற்கான அறிகுறிகள் தெரியவில்லை என்றும் மத்திய அரசு கூறி வருகிறது. இப்போதைய நேரத்தில் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிப்பிற்கு ஆளானவர்கள்...

உதவிக்கரம் நீட்டும் கார்பரேட் நிறுவனங்கள்!

சீனாவில் தொடங்கிய வைரஸ் பாதிப்பு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனாவின் பாதிப்புகள் குறைந்திருந்தாலும் இந்தியாவில் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா...

`ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிக்கவில்லை… 50 பகுதிகள் அடைக்கப்படும்!’- திருச்சி மாவட்ட ஆட்சியர்

கொரோனா நடவடிக்கைகள் தொடர்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார், மாவட்ட ஆட்சியர் சிவராசு. அப்போது, “திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுத்திடவும், பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் பொதுமக்கள் நடமாட்டத்தைக்...

வீட்டு தோட்டத்துக்கான விதைகளை பெற்றுக் கொள்ளுங்கள்: விவசாய திணைக்களம் அறிவிப்பு

இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் covid -19 (கொரோனா) நோய் தொற்றுக் காரணமாக தொடர்ந்து வரும் நாட்களில் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக சகலரும் வீட்டுத்தோட்டம் மேற்கொள்வது அவசியமாகிறது. அதற்கமைய...

UPDATE :உலகில் உள்ள எல்லா நாடுகளையும் விட லண்டனில் சாவு எண்ணிக்கை அதிகம்

பிரித்தானியாவில் இன்று 708 பேர் இறந்துள்ளார்கள். அதுபோக 3,735 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கத்தின் அறிவித்தல் பெரும் தில்லு முல்லாக உள்ளது. ஒரு நாள் இறப்பு எண்ணிக்கை அதிகம்....