முகப்பு சினிமா அமேசானில் நேரடி ரிலீஸ்... பஞ்சாயத்தாகும் `பொன்மகள் வந்தாள்'... கோலிவுட்டில் நடப்பது என்ன?

அமேசானில் நேரடி ரிலீஸ்… பஞ்சாயத்தாகும் `பொன்மகள் வந்தாள்’… கோலிவுட்டில் நடப்பது என்ன?

கொரோனா ஒவ்வொரு துறையிலும் பல்வேறு சிக்கல்களைப் புதிது புதிதாக உருவாக்கிக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மார்ச் மூன்றாவது வாரத்திலேயே தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூடப்பட்டதால், அந்த வாரமும் அதற்கு அடுத்த வாரமும் ரிலீஸாகத் திட்டமிடப்பட்டிருந்த யோகி பாபுவின் ‘காக்டெய்ல்’, ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படங்கள் ரிலீஸாகாமல் போயின. ஒரு மாதத்துக்கு மேலாகியும் லாக் டௌனும் முடிந்தபாடில்லை. கொரோனா தொற்றும் குறைந்தமாதிரி தெரியவில்லை என்பதால், பொறுமையிழந்த சில தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் விற்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இதில் பெரிய திருப்பமாக ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை நேரடியாக அமேசான் ரிலீஸுக்கு விற்றிருக்கிறது சூர்யாவின் 2டி நிறுவனம்.

‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக்கிடம் இதுகுறித்துப் பேசினேன். ”இந்தப் படத்தை உலகம் முழுக்க கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். இந்த லாக் டௌன் எப்போது முடியும், படத்தை தியேட்டரில் எப்போது ரிலீஸ் செய்வோம் என்பதற்கான பதில் யாரிடமும் இல்லை. லாக்டௌனால் எல்லாரும் வீட்டில் இருக்கிற இந்தச் சமயத்தில், ஆன்லைனில் ரிலீஸ் செய்வதுதான் சரியாக இருக்கும் என்று இப்படம் சம்பந்தப்பட்ட எல்லோரும் யோசித்து ஒரு முடிவெடுத்திருக்கிறோம். OTT ரிலீஸால் ஒரேயடியாகப் படம் உலகம் முழுக்கப் போய்ச்சேரும். மே மாதம் அமேசான் ப்ரைமில் படம் ரிலீஸாகும். ரிலீஸ் தேதியை அந்நிறுவனம் அறிவிக்கும். அதுமட்டுமல்லாமல், நிலைமை சரியானதும் தமிழ்நாட்டில் மட்டும் சில இடங்களில் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யும் திட்டமும் இருக்கிறது” என்றார்.

பொன் மகள் வந்தாள்

‘பொன்மகள் வந்தால்’ படத்தை கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய்க்கு அமேசான் வாங்கியிருப்பதாகத் தெரிகிறது. மார்ச் 27-ம் தேதி படம் ரிலீஸூக்கு தயாராகயிருந்ததால் ஒரு மாதத்துக்கு முன்பாகவே அமேசான் தரப்பில் படம் பார்த்து, அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போய் படத்தை அப்போதே வாங்கிக்கொள்கிறோம் என ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். ஆனால், இப்போது தியேட்டரில் ரிலீஸாகாமல் நேரடி ரிலீஸ் ஒப்பந்தம் மூன்று நாள்களுக்கு முன் கையெழுத்தாகியிருக்கிறது.

இதற்கிடையே 2டி-யின் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் நேரடி OTT ரிலீஸுக்கு தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது.

”மொத்த திரையுலகமும் நெருக்கடியில் இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடைமுறையில் உள்ள பழக்கத்தை தகர்த்து 1,000 திரையரங்க உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். இதுகுறித்து தொடர்பு கொண்டபோது தயாரிப்பாளர் எங்கள் கோரிக்கைகளை ஏற்பதாய் இல்லை. அதனால் இனி அந்தத் தயாரிப்பாளர் மற்றும் அவரை சார்ந்தோர் வெளியிடும் அனைத்துப் படங்களையும் OTT தளங்களில் மட்டுமே வெளியிட்டுக் கொள்ளட்டும் என்பது அனைத்து திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக இருக்கிறது” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம்.

காக்டெய்ல்

இதற்கிடையே கொரோனாவால் ரிலீஸாகாமல்போன `காக்டெய்ல்’ படத்தின் தயாரிப்பாளர் பி.ஜி.முத்தையாவிடம் பேசினேன். ”பட ரிலீஸுக்கான எல்லா வேலைகளும் முடிந்திருந்த நிலையில், லாக் டெளனால் படம் தள்ளிப்போய்விட்டது. ‘நிலைமை சரியாகி மக்கள் தியேட்டருக்கு வருவதற்கு சில மாதங்கள் ஆகும்; அதனால் படத்தை ஆன்லைனில் ரிலீஸ் செய்யலாம்’ என நண்பர்கள் சிலர் சொன்னதால், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன். எல்லாம் சரியாக அமைந்தால் படம் ஆன்லைனில் நேரடியாக ரிலீஸாகும்’’ என்றார்.

‘விஸ்வரூபம்’ பட ரிலீஸின்போது கமல்ஹாஸனின் டைரக்ட் டு ஹோம் திட்டம் பிரச்னையானதுபோல இந்த நேரடி OTT ரிலீஸும் கோலிவுட்டில் பல சர்ச்சைகளைக் கிளப்பும் எனத் தெரிகிறது. தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஒன்றுசேர்ந்து இதுகுறித்துப் பேசி விரைவில் நல்ல முடிவுக்கு வர வேண்டும். தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர்கள் என இருதரப்பும் நஷ்டம் இல்லாமல் இந்தச் சூழலை சமாளித்து வெளியே வர வேண்டும் என்பதுதான் சினிமாத்துறை நலம்விரும்பிகளின் விருப்பம்.

Must Read

நாளை ராமர் கோவில் பூமி பூஜை – பிரதமர் மோடி பயணத்தின் முழு விவரம்!

முதலில் ஹனுமன் கார்ஹியில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி பின்னர் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கிறார்.

கணவன் கண் முன்னே கூட்டு பாலியல், ஆதரவு அளித்த போலீஸ்!

பாலியல் குற்றவாளிகளுக்கு போலீஸ் ஆதரவு அளித்து புகாரைப் பெற மறுத்து வந்த நிலையில், மலைவாழ் மக்கள் கூட்டாக முன்னெடுத்த போராட்டம் குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது...

“உடம்பெல்லாம் வலிக்குதுப்பான்னு அவன் அழறப்போ பயமா இருக்கும்”-  கண்ணீரில் மிதக்கும் சென்னை குடும்பம்!

மருந்தில்லா நோயும் வறுமையும் ஒரு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தால்..? பூந்தமல்லியை அடுத்த செந்நீர் குப்பத்தைச் சேர்ந்த ரவீந்திரன் குடும்பம்போலதான் இருக்கும். எதிர் எதிரே இரண்டு பைக்குகள் வந்துவிட்டால், ஒரு வண்டி நின்றுதான் போக...

ஆபாசம், அச்சுறுத்தல், கொலை மிரட்டல்… பெண் ஊடகவியலாளர்களை குறிவைக்கும் கும்பல்!

தமிழ்நாட்டில் ஊடகத்தினர் மீதான தாக்குதலில் `சீஸன் டூ' ஆரம்பித்திருக்கிறது. ஊடகத் துறையில் இயங்கிவரும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து சமீபகாலமாக அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்களில் இதுதொடர்பான குற்றச்சாட்டுகள், விவாதங்கள் என இரு...

TikTok-ஐ வாங்க மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை… வாங்கினால் இந்தியாவில் என்ன செய்யலாம்? #VikatanPoll

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவைப் போலவே டிக்டாக் app-ஐ தடைசெய்யவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதே சமயம், அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட், டிக்டாக் app-ஐ சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்...