முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் அம்மா விட மாட்றாங்க சார்.. ட்விட்டரில் புலம்பிய விஜய் தேவரகொண்டா

அம்மா விட மாட்றாங்க சார்.. ட்விட்டரில் புலம்பிய விஜய் தேவரகொண்டா

தெலுங்கில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் விஜய் தேவரக்கொண்டா. தமிழ்நாட்டிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர் தமிழில் நடித்த நோட்டா படம் படுதோல்வியடைந்தது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த world famous lover படமும் பிளாப் ஆனது. தற்போது தொடர் தோல்விகளால் விஜய் தேவரகொண்டாவின் கெரியர் க்ராப் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஃபைட்டர் என்ற ஹிந்தி படத்தில் தற்போது நடித்து வருகிறார் அவர். இது பாலிவுட்டில் அவரது முதல் படம். அந்த படத்தின் விஜய்க்கு ஜோடியாக இளம் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேநடிக்கிறார்.

தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. தனது வீட்டிலேயே தான் இருக்கிறார். தற்போது டோலிவுட்டில் பிரபலமாகிவரும் சேலஞ்சில் பங்கேற்கும்படி அவரை பிரபல இயக்குனர் கொரட்டல சிவா நாமினேட் செய்திருந்தார். வீட்டு வேலை செய்வதில் பெண்களுக்கு உதவும் வகையில் வேலை செய்து அதை வீடியோ எடுத்து வெளியிடவேண்டும்.

அதற்கு பதில் அளித்துள்ள விஜய் தேவரகொண்டா. “சிவா சார்.. என் அம்மா என்னை எந்த வேலையும் செய்த விடமாட்டேன் என்கிறார். நான் எதாவது செய்தால் அவரது வேலை இரண்டு மடங்காக ஆகிவிடுகிறது என்கிறார். என்னை இங்கு real men ஆக பார்க்கவில்லை, சின்ன பையனை போல்தான் நடத்துகிறார். அதனால் நான் லாக்டவுனில் செய்யும் வேறு சில விஷயங்கள் பற்றி வீடியோ போடுகிறேன்” என கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.

அவர் இப்படி உண்மையாக பேசியிருப்பதை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். மறுபுறம் அவர் ஓவர் ஆக்டிங் செய்கிறார் என ஒரு தரப்பினர் விமர்சிக்கவும் செய்கின்றனர்.

Must Read

கர்ப்பிணி யானை செத்தது எப்படி? இறுதி அறிக்கை வெளியீடு!

கேரளா பாலக்காடு மாவட்டத்தில் அண்ணாச்சிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொலை செய்யப்பட்ட யானை எதனால் உயிரிழந்தது என சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கேரள அரசு அறிக்கை...

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா!!

சென்னையில் உடல்நலம் குறைவால் அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த நபரின்...

‘இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது’

நாடாளுமன்ற இரு அவைகளின் செயலக அலுவலக பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றும் நாடாளுமன்ற அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில அதிரடி...

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...

லொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக தமிழ் நாட்டு மக்களுக்கு பரிச்சயமானவர் . இலங்கையை சேர்ந்த அவர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் பிக்...