முகப்பு சினிமா `அரசு பரிசீலனை செய்யும்..!' -நிவாரணம் குறித்து கடம்பூர் ராஜு சொன்னத் தகவல்

`அரசு பரிசீலனை செய்யும்..!’ -நிவாரணம் குறித்து கடம்பூர் ராஜு சொன்னத் தகவல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “உலகத்தில் 186 நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா தொற்று குறைவாக இருந்தாலும், மத்திய அரசு விமானம், ரயில் போக்குவரத்து நிறுத்தம் எனப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மருத்துவர்களுடன் உரையாடும் அமைச்சர் கடம்பூர் ராஜு

கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்த மருத்துவத்தை விட தனிமைப்படுத்துதல்தான் சிறந்தது என்பதால் நாடளுமன்றம், சட்டமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன . மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். மற்ற மாநிங்களைவிட தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைவாக இருந்தாலும், மாநில அரசும் பல முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 41 பிர்க்காக்களில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சென்றுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியவர்களை வருவாய்த்துறை, காவல்துறை, மருத்துவ சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை அடங்கிய குழுவினர் மூலம் 600 குடும்பங்கள் அடையாளப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

அமைச்சர் ஆய்வு

அவர்கள் வெளியே வரக்கூடாது மற்றவர்களைத் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 14 இடங்களில் மகளிர் திட்டத்தின் கீழ் விற்பனைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. நாம் நம்மையும் பாதுகாக்க வேண்டும்; மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று உணர்ந்தால்தான் கொரோனா இல்லை என்ற நிலையை உருவாக்க முடியும். 144 தடை உத்தரவினை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மகத்தான பணிகளை பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர் பணிகளைச் செய்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு நிலையிலும் பணிபுரியும் பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினருக்கு நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக முதல்வரின் கவனித்திற்கு எடுத்துச் செல்வேன். அரசும் இதைப் பரிசீலனை செய்யும்.

சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

செய்தியாளர்கள் ஒத்துழைக்கும்போது அரசும் ஒத்துழைக்கத் தயாராக உள்ளது. ரூ.1 லட்சமாக இருந்த பத்திரிகையாளர்களின் மருத்துவ நலநிதி ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்டத் தலைநகரத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு அரசின் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கான நல வாரியம் விரைவில் செயல்பட உள்ளது” என்றார்.

Must Read

பிரிட்டன் பிரதமரின் கர்ப்பம் தரித்த பெண் நண்பிக்கும் கொரோனா!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பெண் நண்பி தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது தாயுடன் தங்கி வருகிறார். பிரிட்டன் பிரதமர் (வயது 55) கொரோனா தொற்றுக்கு முன்பு...

`கொரோனா தாக்கம்’ – எப்படி இருக்கிறது திருப்பூர் தொழில்துறை? #MyVikatan

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!கொரோனாவின் கோரப்பசி உலகெங்கும்...

`வீட்டிலேயே முடங்கிக் கிடந்தா சோறு கிடைக்காது..!’ -சாத்தூர் பைபாஸில் கவனம் ஈர்த்த முதியவர்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உலகமே அதிர்ந்து போயுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன....

`மதுவுக்காக கிணற்றுக்குள் குதித்த தொழிலாளி!’ – வாளிக்குள் குவார்ட்டரை அனுப்பி கெஞ்சிய மக்கள்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக மது கிடைக்காமல் குடிமகன்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை...

கொரோனா வைரஸ் எதிரொலி! – வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு #Corona #NowAtVikatan

வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு!வாட்ஸ் அப்பில் மற்றவர்களுக்குத் தகவல்களைப் பகிர புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதிகம் முறை பகிர்ந்த தகவலை 5 நபர்களுக்குப் பதிலாக இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும். கொரோனா வதந்தியைத்...