முகப்பு சினிமா அரியலூர்:`குடிகாரனுக்கு யாரு பொண்ணு கொடுப்பா?’ - கேள்வி கேட்ட தந்தை; அடித்துக்கொன்ற மகன்

அரியலூர்:`குடிகாரனுக்கு யாரு பொண்ணு கொடுப்பா?’ – கேள்வி கேட்ட தந்தை; அடித்துக்கொன்ற மகன்

`குடிகாரப் பயலுக்கு எப்படிடா பொண்ணு கொடுப்பாங்க’ என்று தந்தை கேட்டதால் ஆத்திரமடைந்த மகன், குடி போதையில் தந்தையை அடித்துக் கொலை செய்திருக்கும் சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய மகனை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

கொலை

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள கொங்குநாட்டார்குப்பத்தைச் சேர்ந்தவர், சக்கரவர்த்தி. விவசாயம் செய்து வரும், இவரது மகன் கலியமூர்த்தி. இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்தநிலையில், தனக்கு இன்னும் திருமணம் நடத்தி வைக்கவில்லை என்று கலியமூர்த்தி தனது தந்தையிடம் கூறி அடிக்கடி பிரச்னையில் ஈடுபட்டுவந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த கலியமூர்த்தி அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து சக்கரவர்த்தியைச் சரமாரியாகத் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் படுகாயமடைந்த சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்து கலியமூர்த்தி தப்பிச் சென்றுவிட்டார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே இதுகுறித்து ஆண்டிமடம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்கரவர்த்தியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கலியமூர்த்தியைக் காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர். தனக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை என்ற காரணத்திற்காக மகனே தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சென்னை அதிர்ச்சி:`சின்னவன் கொலை; மூத்தவனுக்கு ஜெயில்!’ – அதிர்ச்சியில் அம்மா

வழக்கை விசாரித்து வரும் காவலர்களிடம் பேசினோம். “கலியமூர்த்தி குடித்துவிட்டு வந்தால், தான் வசிக்கும் தெரு மக்களுக்குப் பல தொல்லைகள் கொடுத்து வந்திருக்கிறார். சக்கரவர்த்தி குடும்பத்தில் மூன்று பெண், மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளன. மூத்தமகன் மற்றும் பொம்பள புள்ளைங்க எல்லாத்தையும் கல்யாணம் பண்ணிட்டாங்க. இந்நிலையில் இரண்டு பசங்களுக்குக் கல்யாணம் பண்ணாததால் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். கலியமூர்த்தி என்ற அவரது மகன், `என்னுடைய செட்டு பசங்க எல்லாரும் கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்காங்க. எனக்கு மட்டும் கல்யாணம் பண்ணாம இருக்கு’ என்று சொல்லி பலமுறை அவரது தந்தையிடம் பிரச்னை பண்ணியிருக்கிறான்.

கொலை

இந்த நிலையில் நேற்று இரவு குடித்துவிட்டு வந்து வீட்டில் கடுமையாகப் பிரச்னை செய்தபோது, `உன்னைப் போல குடிகாரப் பயலுக்கு யாருடா பொண்ணு தருவா?’ என்று சக்கரவர்த்தி சொல்லியிருக்கிறார். அதற்கு, `நான் என்ன குடிகாரனா?’ என்று கூறி ஆத்திரத்தில் கலியமூர்த்தி அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்துத் தலையில் வெட்டியுள்ளான். அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். ரத்தத்தைப் பார்த்ததும் மிரண்டுபோய் தற்பொழுது தலைமறைவாக இருக்கிறான். தேடிக்கொண்டிருக்கிறோம் கூடிய விரைவில் பிடித்துவிடுவோம்” என்று கூறினர்.

Also Read: `குவைத் காதல்… இரண்டாம் திருமணம்; தலைமறைவான மனைவி?’ -தஞ்சையைப் பதறவைத்த கொலை

Must Read

லன்டன் தோட்டங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் தப்பி ஓட்டம்: மரக்கறிகளில் கொரோனாவா ?

  ஹாட்பட்ஷியர் என்று சொல்லப்படும் பெரும், மாநகரில் உள்ள காய்கறிப் பண்ணையில், 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 4 பேர் தப்பியோடியுள்ளதாக அறியப்படுகிறது. வட்பேட், உள்ளடங்கலாக பல நகரங்களை உள்ளடக்கிய மாநிலமே ஹாட்பட்ஷியர்...

Swapna-வை சுற்றும் மர்மங்கள்… பறிபோகும் Pinarayi Vijayan பதவி?| Kerala Gold Smuggling

01:15 gold smuggling scandal2:52 CM removes his principal secretary04:13 Who is Swapna?06:05 Questioning Pinarai Vijayan10:50 Swapna Audio?

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது? (Video)

தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது? என்பது தொடர்பில் விளக்குகிறார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம். The post கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

`MASTER பிரமாண்டமா இருக்கு!’ – Review by Vijay Sethupathi | Lokesh Kanagraj | Anirudh

04:45 Master Trailer 05:43 Cinema Experience 08:40 Telugu Villain11:24 Allu Arjun Pushpa12:39 Muttiah Muralitharan Biopic13:34 Body Language15:28 Rajini & Chiranjeevi 17:50 Vimal Friendship19:15 Being...