முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் அருண்ராஜா காமராஜின் இரண்டாவது படம் இவர் கூடவா?

அருண்ராஜா காமராஜின் இரண்டாவது படம் இவர் கூடவா?

கனா படத்தில் இயக்குநர் அவதாரம் எடுத்த இயக்கும் இரண்டாவது படம் பற்றிய தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. அதாவது, தனது இரண்டாவது படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் அவர் சேரவிருப்பதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

மான் கராத்தே படத்தில், சிவகார்த்திகேயனின் நண்பராக நடித்திருந்த அருண்ராஜா, நிஜத்திலேயே அவரின் கல்லூரி தோழர்தான். ராஜா ராணி படத்திலும் சிறிய வேடம் ஒன்றில் நடித்திருப்பார். பின்னர் ரஜினி, விஜய் படங்களில் பாடகராக அவதாரம் எடுத்தார். ரஜினியின் கபாலி படத்தில் நெருப்புடா பாடலை பாடியவர் இவர்தான். விஜய் நடித்த பைரவா படத்துக்காக வர்லாம் வர்லாம் வா பைரவா பாடலும் இவர் குரலில் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது.

கதை ஒன்றை தயார் செய்து வைத்திருந்த அருண்ராஜா, தனது நண்பர் சிவகார்த்திகேயன் உதவியும் அதை படமாக எடுத்தார். சிவகார்த்திகேயன் தயாரித்திருந்த கனா படம் வெற்றியடைந்த நிலையில், அடுத்த படத்துக்கான கதையையும் எழுதி முடித்துவிட்டாராம் அருண்ராஜா. பின்னர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் பாடலை எழுதி நல்ல பெயரை பெற்றார். முன்னதாக, விஜய் 65 படத்தை இயக்குபவருக்கான பட்டியலில் இவரது பெயரும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான், அருண்ராஜாவின் இரண்டாவது படம் பற்றிய பேச்சு எழுந்துள்ளது. அதில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாகவும், ஹீரோயின் விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் தயாரிப்பாளரான போனிகபூர் பேனரில் எடுக்கப்படவுள்ளதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Must Read

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!  

அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்றை அனுப்பினார் ரம்: பொறிஸ் ஜோன்சன் மருத்துவர்

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில், செயற்கை சுவாத்தோடு இருக்கும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. அமெரிக்க அதிபர் டொனால் ரம்...

நிபுணர்களின் கருத்துப்படி ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு ? – அரசு வட்டாரத் தகவல்

ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கபட உறுதியான வாய்ப்புகள் இருப்பதாக அரசுத் தரப்புத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை நாடு...

ஊரடங்கில் பள்ளி மாணவி கர்ப்பம்…! காட்டிக்கொடுத்த தங்கை கொலை…

கொசவம்பட்டியைச் சேர்ந்த சந்திரன் - வத்சலா தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருந்தனர். முதல் மகள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த நிலையில் இரண்டாவது மகள் அப்பகுதியில் உள்ள...

கொரோனாவுக்கு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கொரனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி பயன்படுத்திக் கொள்ளப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள்...