முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் அறிஞர் அண்ணா கேலிச்சித்திரம்: 'தினத்தந்தி'க்கு ஸ்டாலின் கண்டனம்!!

அறிஞர் அண்ணா கேலிச்சித்திரம்: ‘தினத்தந்தி’க்கு ஸ்டாலின் கண்டனம்!!

அறிஞர் அண்ணாவின் கேலிச் சித்திரம் தொடர்பாக ஸ்டாலின் இன்று ட்விட்டர் பதிவு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், “பேரறிஞர் அண்ணாவை அவமதிக்கும் கேலிச்சித்திரத்தை தினத்தந்தி அனுமதித்திருப்பது கண்டனத்திற்குரியது.

கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு; ஆனால் வரலாறு தெரியாதவர்கள் பொறுப்பின்றி தலைவர்களையும், இயக்கங்களையும் கொச்சைப்படுத்துவதைத் தடுத்து இதழியல் பண்பாட்டைக் காக்க வேண்டும்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அவர், தினத்தந்தி குழுமத்தின் நிர்வாக இயக்குநரான பாலசுப்பிரமணியன் ஆதித்தனுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ” தினத்தந்தி நாளிதழில் இன்று வெளியாகியுள்ள காட்டூனில், பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலையின் தலையை மறைத்து, கொரோனா வைரஸ் சித்திரத்தை வரைந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

மேலும், 19 ஆம் தேதி வெளியான கருத்துப்படத்திலும், களங்கம் கற்பிக்கும் எண்ணத்துடன் கழகத்தின் பெயர் திரிக்கப்பட்டு, கழக வரலாற்றையே அறியாத ஒருவரால் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. அது ஒருவழிப்பாதையாகவும், பொறுப்பற்றதனமாகவும் போய்விடக் கூடாது. சம்பந்தப்பட்ட அனைலரும் இதை நினைவில் கொண்டு, இதழியல் பண்பாட்டினைப் பாதுகாத்திட வேண்டும் என விரும்புகிறேன்” என்று ஸ்டாலின் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Must Read

இந்தி நடிகை திவ்யா சவுக்சே: புற்றுநோயால் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் நடிகை திவ்யா சவுக்சே (28). நடிகையான பின்னர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் திவ்யா சவுக்சே வசித்து வந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் ஹை அப்னா...

வாழ்த்துங்களேன்!

14.7.20 முதல் 27.7.20 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத...

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...