முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் அலைமோதும் மக்கள் கூட்டம்: ஸ்டாலின் சொன்ன யோசனை!

அலைமோதும் மக்கள் கூட்டம்: ஸ்டாலின் சொன்ன யோசனை!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பிறகு ஊரகப் பகுதிகளில் சில துறைகளில் ஊரடங்கு தளர்த்தப்படலாம் என மத்திய அரசு அறிவித்தாலும் மாநில அரசு தளர்வு இல்லை என அறிவித்தது.

மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட சில இடங்களில் ஊரடங்கை மேலும் கடுமையாக்கியுள்ளது. சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் நாளை முதல் 29ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்டுள்ளது. சேலத்தில் இன்று முதல் 28ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் நாளை முதல் 28ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூரில் நாளை மட்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும், மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் அரசின் நோக்கத்திற்கு மாறாகவே கள நிலவரங்கள் உள்ளன. நான்கு நாள்கள் கடைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதுமே இன்று காலை முதல் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

காய்கறிக்கடை, இறைச்சிக் கடை, பலசரக்குக் கடை, மருந்தகங்கள், பாலகங்கள் ஆகியவற்றில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். பல இடங்களில் தனிமனித இடைவெளி என்பது கடைபிடிக்கப்படாமல் கூட்டத்தில் முண்டியடிப்பது நடைபெறுகிறது. 1 மணியுடன் கடைகள் அடைக்கப்படும் என்பதால் அதற்குள் பொருள்களை வாங்க வேண்டும் என்பதால் மக்கள்ள் கூட்டம் அலைமோதுகிறது.

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமல்லாமல் மாநிலத்தில் பல இடங்களில் இதுதான் நிலைமை. எப்போது வேண்டுமானாலும் தங்கள் பகுதிகளுக்கும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்பதால் இன்றே வாங்க வந்துள்ளோம் என மக்கள் கூறுவதைப் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பல இடங்களுக்கு 26ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் இன்று கடைகளில் மக்கள் கூட வாய்ப்புள்ளது. நெரிசலைத் தவிர்க்கும் வகையில், இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து, மக்கள், தனிமனித விலகலுடன் பொருட்களை வாங்கிட உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Must Read

நாளை ராமர் கோவில் பூமி பூஜை – பிரதமர் மோடி பயணத்தின் முழு விவரம்!

முதலில் ஹனுமன் கார்ஹியில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி பின்னர் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கிறார்.

கணவன் கண் முன்னே கூட்டு பாலியல், ஆதரவு அளித்த போலீஸ்!

பாலியல் குற்றவாளிகளுக்கு போலீஸ் ஆதரவு அளித்து புகாரைப் பெற மறுத்து வந்த நிலையில், மலைவாழ் மக்கள் கூட்டாக முன்னெடுத்த போராட்டம் குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது...

“உடம்பெல்லாம் வலிக்குதுப்பான்னு அவன் அழறப்போ பயமா இருக்கும்”-  கண்ணீரில் மிதக்கும் சென்னை குடும்பம்!

மருந்தில்லா நோயும் வறுமையும் ஒரு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தால்..? பூந்தமல்லியை அடுத்த செந்நீர் குப்பத்தைச் சேர்ந்த ரவீந்திரன் குடும்பம்போலதான் இருக்கும். எதிர் எதிரே இரண்டு பைக்குகள் வந்துவிட்டால், ஒரு வண்டி நின்றுதான் போக...

ஆபாசம், அச்சுறுத்தல், கொலை மிரட்டல்… பெண் ஊடகவியலாளர்களை குறிவைக்கும் கும்பல்!

தமிழ்நாட்டில் ஊடகத்தினர் மீதான தாக்குதலில் `சீஸன் டூ' ஆரம்பித்திருக்கிறது. ஊடகத் துறையில் இயங்கிவரும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து சமீபகாலமாக அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்களில் இதுதொடர்பான குற்றச்சாட்டுகள், விவாதங்கள் என இரு...

TikTok-ஐ வாங்க மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை… வாங்கினால் இந்தியாவில் என்ன செய்யலாம்? #VikatanPoll

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவைப் போலவே டிக்டாக் app-ஐ தடைசெய்யவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதே சமயம், அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட், டிக்டாக் app-ஐ சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்...