முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் அவங்க அப்படி என்ன செஞ்சாங்க? இஸ்லாமிய இயக்கங்கள் கண்டனம்!

அவங்க அப்படி என்ன செஞ்சாங்க? இஸ்லாமிய இயக்கங்கள் கண்டனம்!

உரிய ஆவணங்களுடன் தமிழ்நாட்டுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் வந்த வெளிநாட்டு முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களை உடனடியாக விடுவித்து அவர்கள் சொந்த நாட்டுக்கு செல்லும்வரை கண்ணியமாக நடத்த வேண்டுமென தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுப் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு முஸ்லீம்களை கைது செய்து அவர்களை சிறையில் அடைத்திருப்பதை தமிழ்நாடு இஸ்ளாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதுடன் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறது.

உலகளாவிய இயக்கமான என்பது அமைதி வழியில் தங்களை தாங்களே பண்படுத்திக்கொள்வதற்காக உலகம் முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இறைவழிபாடுகளை தங்களுக்குள்ளே நடத்திக்கொண்டு வரும் ஆன்மீக பேரியக்கமாகும். இவர்கள் பிற மதத்தவர்களுக்கு மதப்பிரச்சாரம் செய்யும் அமைப்பல்ல. தங்களுக்குள்ளே ஒழுக்கம், தூய்மை, நேர்மை, இறையச்சம் போன்றவற்றை வளர்த்துக்கொள்ள நெடுந்தூரம் பயணித்து நேர்மையோடு வாழக்கூடியவர்கள்.

வாழ்நாளில் யாருக்கும் எதற்கும் உள்ளத்தால் தீங்கிழைக்கக்கூடாது என்ற லட்சியத்தை சுமந்து சொந்த பணத்தில் இறை தியானத்திற்காக ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு என ஆன்மீக பயணம் மேற்கொள்வார்கள். இவர்களால் உலகம் முழுவதும் எந்த விதமான சர்ச்சையோ, பதட்டமோ இதுவரை எங்கும் ஏற்பட்டதாக ஒரு நிகழ்வுகூட இல்லை. இப்படிப்பட்ட ஒழுக்கம் சார்ந்த ஆன்மீகவாதிகளை தேவையில்லாமல் சர்ச்சைக்குள்ளாக்குவதும், சங்கடப்படுத்துவதும் வேதனையளிக்கிறது.

முறையாக விசா பெற்று தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுலா வந்த வெளிநாட்டு முஸ்லிம் பயணிகளான அவர்களை ஏதோ கள்ளத்தோணியில் வந்தவர்களை போலவும், தீவிரவாதிகளை போலவும் தமிழக அரசு நடத்துவது கண்டனத்திற்குரியதாகும். முறையான அனுமதியோடு உரிய ஆவணங்களோடு வந்து அரசுக்கு தெரிந்த நிலையில் தங்கி இருந்தவர்களை எல்லாம் பதுங்கி இருந்தவர்கள் என குறிப்பிட்டு சுற்றுலா விசாவில் வந்து மதப்பிரச்சாரம் செய்ததாக கூறி அவதூறாகக் கைது செய்திருப்பது எந்தவகையில் நியாயம்?

அவர்கள் எங்கு மதப்பிரச்சாரம் செய்தனர்? பள்ளிவாசல்களில் தங்கி முஸ்லீம்களிடம் பேசுவது எப்படி மதப்பிரச்சாரமாகும்? இதேபோல் ஆன்மீக சுற்றுப்பயணமாக தமிழகத்திற்கு வருகை புரிந்த பிற மதத்தவர்களை கைது செய்து தமிழக அரசு சிறையில் அடைத்துள்ளதா? அவர்களை கைது செய்வதன் மூலம் மத்திய பாஜக அரசின் முஸ்லீம் விரோத மனப்பான்மையை தமிழக அரசும் கையிலெடுத்துள்ளதோ என ஐயம் ஏற்படுகிறது.

எனவே, பொய் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்துள்ள அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதோடு அவர்கள் சொந்த நாட்டுக்கு செல்லும்வரை கண்ணியமாக நடத்த வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Must Read

இந்தி நடிகை திவ்யா சவுக்சே: புற்றுநோயால் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் நடிகை திவ்யா சவுக்சே (28). நடிகையான பின்னர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் திவ்யா சவுக்சே வசித்து வந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் ஹை அப்னா...

வாழ்த்துங்களேன்!

14.7.20 முதல் 27.7.20 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத...

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...