முகப்பு சினிமா `அவர்களை கடலிலே சுட்டு வீழ்த்துங்கள்!’ - அமெரிக்க, இரான் இடையே கடும் பதற்றம்... காரணம் புரட்சி...

`அவர்களை கடலிலே சுட்டு வீழ்த்துங்கள்!’ – அமெரிக்க, இரான் இடையே கடும் பதற்றம்… காரணம் புரட்சி படை?

2020-ம் ஆண்டு தொடக்கத்தில்… அதாவது ஜனவரி மாதம் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் இருநாடுகளிடையே ஏற்கெனவே இருந்து வந்த பதற்றம் பன்மடங்கு அதிகரித்தது. உலகமே கொரோனா என்னும் பெரும் எதிரிக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் இந்தச் சூழலிலும் அமெரிக்க இரான் மோதலில் தொய்வு ஏற்படவில்லை என்றுதான் கூற வேண்டும்.

போர்க்கப்பல்

இரான் சில புரட்சி அமைப்புகளுடன் சேர்ந்து செயல்படுவதாகவும் தொடர்ந்து மோசமான திட்டங்களை நடத்த அந்தநாடு திட்டமிட்டு வருவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது. ட்ரம்ப் இந்த மாத தொடக்கத்தில், “இரான், அவர்களுக்கு ஆதரவான படைகள் இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மற்றும் இராக்கின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்திருக்கின்றன. நாங்கள் அவர்களுடன் விரோதப் போக்கைக் கடைப்பிடிக்க விரும்பவில்லை. ஆனால், அவர்கள் விரோதத்துடன் செயல்பட்டால், இதுவரை வருத்தபடாத அளவுக்கு அவர்கள் வருத்தப்பட வேண்டிய சூழல் உருவாகும்’ என எச்சரித்திருந்தார்.

Also Read: `அப்படி நடந்தால்… இதுவரை இல்லாத அளவு வருத்தப்படுவீர்கள்..!’ – இரானை எச்சரித்த ட்ரம்ப்

இந்த நிலையில் இன்று ட்ரம்ப் ட்விட்டரில், “ஆயுதம் ஏந்திய இரானிய படகுகள் அமெரிக்க கப்பல்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினால், அவைகளை சுத்து வீழ்த்த அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனப் பதிவிட்டார். ட்ரம்பின் இந்த எச்சரிக்கைக்கு இரான் அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயல்படும் சில புரட்சி படைகளின் 11 கப்பல்கள் அமெரிக்க கப்பகளுக்கு நெருக்கமாக உள்ளதாகவும், அமெரிக்க கப்பலின் பயணத்துக்கு நெருக்கடி ஏற்படுத்துவதுதான் திட்டம் என்றும் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்தே ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அமெரிக்கா – இரான்

இது தொடர்பாகப் பேசியுள்ள இரான் ராணுவ செய்தித் தொடர்பாளர், “அமெரிக்கா மற்றவர்களை வம்புக்கு இழுப்பதை நிறுத்திவிட்டு, அவர்கள் படையில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் முயற்சிகளை எடுக்க வேண்டும்” என்றார். அமெரிக்காதான் தற்போது வரை கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது வரையில் 8,20,273 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்து விட்டது. இந்த நிலையிலும் தெற்கு சீன கடற்பகுதியில் போர்க்கப்பல், இரானுக்கு எச்சரிக்கை என அமெரிக்காவின் ராணுவ செயல்பாடுகள் அதிர்ச்சி ரகத்தில் உள்ளதாகப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...