முகப்பு சினிமா ``ஆகம விதிப்படிதான் நடத்த வேண்டும்!’ -ஊரடங்கால் திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவ விழா ரத்து

“ஆகம விதிப்படிதான் நடத்த வேண்டும்!’ -ஊரடங்கால் திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவ விழா ரத்து

பிரசித்திபெற்ற ஸ்ரீ சனிபகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

பிரம்மோற்சவ விழா ரத்து

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள உலகப்புகழ்பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் தலமான ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா, இந்த ஆண்டு ஏப்ரல் 27 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் ஜூன் 5 -ம் தேதியுடன் முடிவடையும். எல்லா ஆண்டும் இவ்விழா நடைபெறும் நாள்களில் எல்லா நிகழ்ச்சிகளும் ஆலய சிவாச்சாரியார்கள், பூசாரிகள், ஊழியர்கள், ஸ்தானிகர்கள், தேவஸ்தானத்திற்குட்பட்ட 5 கிராமத்தினர் மற்றும் இதரப் பகுதி மக்கள் பங்களிப்புடன் மிகச் சிறப்பாக நடைபெறும்.

மேலும், விழாவில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா, ஸ்ரீ செண்பக தியாகராஜர் உன்மத்த நடனம், தேர்த் திருவிழா, ஸ்ரீசனீஸ்வரபகவான் சகோபுர வீதியுலா, தெப்போற்சவம் ஆகிய நிகழ்வுகளின்போது பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். அதுமட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் விழாவிற்கு அதிகளவில் வருவார்கள்.

பிரம்மோற்சவ விழா ரத்து

இந்திய அரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவும் இக்காலகட்டத்தில் ஆலயங்களில் கூட்டம் கூடுவது, பக்தர்களின் தரிசனம், விழாக்கள் மற்றும் ஊர்வலம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டு 144 பிரிவின் கீழ் ஊரடங்கு தடைச்சட்டம் அமலில் உள்ளது. எனவே, திருவிழாவின் முக்கிய தொடக்க நிகழ்வான கொடியேற்றத்தை நடத்த இயலாத காரணத்தினால் பிரம்மோற்சவக் கொடியேற்றும் விழா ரத்து செய்யப்படுகிறது.

இதுபற்றிக் கோயில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் பேசியபோது, “விழாவின் அனைத்து நிகழ்வுகளும் ஆகம விதிகள் மற்றும் சம்பிரதாயப்படி நட்சத்திர நாளை கணக்கில் கொண்டு நடத்தப்பட வேண்டும். எனவே, ஊரடங்கின் காரணமாக இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்படுகிறது” என்று அறிவித்துள்ளார். முதன்முறையாக இவ்விழா நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

Must Read

இன்னும் சில மணி நேரங்களில் இருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் விபரங்கள்

இன்று(06) இலங்கை நேரப்படி மதியம் 3 மணி முதல், தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பிக்கும். உடனுக்கு உடன் வெற்றிபெற்றவர்கள் யார் என அறிந்து கொள்ள அதிர்வு செய்திகளோடு இணைந்திருங்கள். நாம் உடனுக்கு உடன்...

துறைமுக கிடங்கில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததே காரணம் பெய்ரூட் குண்டுவெடிப்பு பலி 100 ஆனது: 4,000 பேர் படுகாயம்; வீடுகள் மீது உடல் பாகங்கள்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 4,000க்கும் மேற்பட்டோர்காயம் அடைந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில்...

ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்று பெரிய கொண்டாட்டங்களில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 20 அகவை இளைஞன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை தொற்று பலருக்கு இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களோடு நெருங்கிய தொடர்பில்...

வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, வுகான் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாங்னான் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனாவில் இருந்து மீண்ட...

கொரோனா கதியில் இருந்து மீண்டதா? இன்னமும் திணறுகிறது அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு

நியூயார்க்: மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்று அதிபர் டிரம்ப் என்னதான் சொன்னாலும், உண்மையில் நிலைமை வேறாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது...