முகப்பு சினிமா `ஆண்டில் 3 மாதங்கள்தான் வருமானம்; வாழ்வாதாரமே கேள்விக்குறி!’ -கலங்கும் புதுவைக் கலைஞர்கள்

`ஆண்டில் 3 மாதங்கள்தான் வருமானம்; வாழ்வாதாரமே கேள்விக்குறி!’ -கலங்கும் புதுவைக் கலைஞர்கள்

புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் வாழ்கின்ற மேடை இசைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், தெருக்கூத்துக் கலைஞர்கள், தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் அனைவரும் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

தங்கவேலு

காரைக்கால் மாவட்ட கலைஞர்களின் மாமன்றத்தின் தலைவர் தங்கவேலுவிடம் பேசினோம். “அனைத்துவகை கலைஞர்களாக புதுவையில் சுமார் 10,000 பேரும், காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 5,000 பேரும் வசிக்கிறோம். எங்களுக்கு ஓராண்டில் வாழ்வாதாரமாக விளங்குவது பங்குனி, சித்திரை, வைகாசி, மாதங்களில் நடைபெறக்கூடிய கோயில் திருவிழாக்கள்தான். இவை அத்தனையும் இன்று கொரோனா ஊரடங்கால் முற்றிலுமாய் முடங்கிவிட்டது. எப்போதாவது திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் வாய்ப்புக் கிட்டும். கலைஞர்கள் முகத்தில் அரிதாரம் பூசிவிட்டால் வேறு எந்த வேலைக்கும் போக முடியாது. வேறு வேலையும் தெரியாது.

தமிழ்நாட்டிலாவது நாட்டுப்புறக் கலைஞர்களுக்குத் தனி வாரியம் வைத்திருக்கிறார்கள். அங்கு கலை பண்பாட்டுத்துறை சிறப்பாகச் செயல்பட்டு கலைஞர்களுக்கு உதவி செய்கிறார்கள். இங்கு கலை பண்பாட்டுத்துறை செயலிழந்து நிற்கிறது. வருடத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் தருவார்கள். ஒரு நிகழ்ச்சிக்கு ரூ. 5,000 -ம்தான். ஆனால் அதைப் பெறுவதற்கு 3 மாதங்கள் அலைய வேண்டும்.

3 மாதங்களில்தான் வருமானம்

தமிழ்நாட்டில்கூட அரசும், கருணை உள்ளம் கொண்ட நடிகர்களும் ஏராளமான உதவிகள் செய்கிறார்கள். புதுவை அரசிடமிருந்து எங்களுக்கு எந்த உதவியும் கிடையாது. எனவே இந்த இக்கட்டான நேரத்தில் கலைஞர்களுக்கு உடனடியாக அரசு ரூ.15,000 நிவாரணத் தொகையாக வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

Also Read: குதிரையிலிருந்து ஹென்ரா, வவ்வாலிலிருந்து கொரோனா… வைரஸ்களின் திகில் ஃப்ளாஷ்பேக்!

இதுகுறித்து புதுவை மாநில கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் ராகிணியிடம் பேசினோம். “கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது பற்றி நேற்றுதான் கலைஞர்கள் என்னிடம் மனு கொடுத்துள்ளனர். இதுகுறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்வேன். இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது அரசுதான். மற்றபடி நான் இப்பொழுதுதான் பதவி ஏற்றுள்ளேன். எங்கள் துறை சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு இனி உடனுக்குடன் பணம் கிடைக்க ஆவன செய்கிறேன்” என்றார்.

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...