முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் ஆதரவற்றவர்களுக்கு உணவு மையங்கள்: மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம்

ஆதரவற்றவர்களுக்கு உணவு மையங்கள்: மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம்

டெல்லி: சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ஆதரவற்றவர்களுக்கு உணவு மையங்களை அமைக்க சமூக நீதித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா சமூக பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவுக்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை வழங்கியது. அதன்படி, அத்தியாவசிய தேவைகளற்ற கடைகள், போக்குவரத்து இயங்காது எனவும், அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் உள்ளிட்டவைகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால், வீடற்றவர்கள், உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் வீடற்ற மக்களை சமூக நலக்கூடங்களில் தங்க வைத்து உணவளிக்க மாநகராட்சிக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பலரை மாநகராட்சி நிர்வாகம் தங்க வைத்து உணவு வழங்கி வருகிறது. எனினும், இந்த நடைமுறைகள் தெரியாத பலர் சாலைகளில் சுற்றி வருகின்றனர். அவர்களை காப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, இந்தூர், பாட்னா, நாக்பூர் மற்றும் லக்னோ ஆகிய 10 மாநகராட்சிகளில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஆதரவற்றவர்களுக்கான உணவு மையங்களை உடனடியாக தொடங்குமாறு மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான முழு நிதியையும் அமைச்சகமே வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read

பிரிட்டன் பிரதமரின் கர்ப்பம் தரித்த பெண் நண்பிக்கும் கொரோனா!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பெண் நண்பி தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது தாயுடன் தங்கி வருகிறார். பிரிட்டன் பிரதமர் (வயது 55) கொரோனா தொற்றுக்கு முன்பு...

`கொரோனா தாக்கம்’ – எப்படி இருக்கிறது திருப்பூர் தொழில்துறை? #MyVikatan

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!கொரோனாவின் கோரப்பசி உலகெங்கும்...

`வீட்டிலேயே முடங்கிக் கிடந்தா சோறு கிடைக்காது..!’ -சாத்தூர் பைபாஸில் கவனம் ஈர்த்த முதியவர்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உலகமே அதிர்ந்து போயுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன....

`மதுவுக்காக கிணற்றுக்குள் குதித்த தொழிலாளி!’ – வாளிக்குள் குவார்ட்டரை அனுப்பி கெஞ்சிய மக்கள்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக மது கிடைக்காமல் குடிமகன்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை...

கொரோனா வைரஸ் எதிரொலி! – வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு #Corona #NowAtVikatan

வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு!வாட்ஸ் அப்பில் மற்றவர்களுக்குத் தகவல்களைப் பகிர புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதிகம் முறை பகிர்ந்த தகவலை 5 நபர்களுக்குப் பதிலாக இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும். கொரோனா வதந்தியைத்...