முகப்பு சினிமா `ஆன்லைனில் ஆலோசனை; நேரில் இலவச சிகிச்சை!’ -காரைக்குடியைக் கலக்கும் மருத்துவர் #lockdown

`ஆன்லைனில் ஆலோசனை; நேரில் இலவச சிகிச்சை!’ -காரைக்குடியைக் கலக்கும் மருத்துவர் #lockdown

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மளிகைக் கடை, மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்டவை மட்டுமே திறந்திருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மளிகைப் பொருட்கள் வழங்கும் டாக்டர்

ஆனாலும் முழுமையாக ஊரடங்கு தளர்த்தப்படாத நிலையில், பலரும் அடிப்படைத் தேவை மற்றும் மருத்துவத் தேவை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த மருத்துவர் குமரேசன், தினமும் 150 நபர்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச மருத்துவ ஆலோசனையும், காரைக்குடி சுற்று வட்டாரங்களில் பொதுமக்களுக்கு மளிகைப் பொருள்களையும் வழங்கிவருகிறார்.

மருத்துவர் குமரேசனிடம் பேசினோம். “நான் தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறேன். என்னுடைய வேலை நேரம் போக மற்ற நேரங்களில் ஆன்லைன் மூலம் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்குகிறேன். பல இடங்களில் மருந்துக் கடைகள் இருந்தாலும், மருத்துவமனை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அவர்களுக்குத் தேவையான ஆலோசனையை எங்கிருந்து யார் கேட்டாலும் வழங்குகிறேன். அதேசமயம், முக்கியத்துவம் மற்றும் தேவையை உணர்ந்தும் கவனமாக ஆலோசனை சொல்கிறேன்.

இலவச மருத்துவ உதவி

தற்போது, எனக்கு மருத்துவமனையில் பணி குறைந்துள்ளதால், கூடுதலாகப் பல நோயாளிகள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களை அணுகி மருத்துவ ஆலோசனை வழங்குகிறேன். சாதாரண இருமல் என்றாலே கொரோனா இருக்குமோ என்று பலரும் அச்சப்படுகிறார்கள். அவர்களுக்கு தைரியம் ஊட்டி மருத்துவ உதவி செய்து, தேவையான நபர்களை மட்டும் மருத்துவமனைக்கு நேரில் செல்ல அறிவுறுத்துகிறேன்.

மேலும், மருத்துக்கடையில் பணியாற்றும் நபர்களிடம் நானே ஆன்லைனில் பேசி, நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கச் சொல்கிறேன். சமூக வலைதளங்கள் மூலம் பலருக்கு என்னுடைய எண்ணைப் பகிர்ந்துள்ளதால், தினமும் 70 முதல் 150 நபர்கள் வரை என்னைத் தொடர்புகொள்கின்றனர். இவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன். தேவைப்படும் சிலருக்கு, மருந்துப் பொருள்களையும் இலவசமாக வழங்குகிறேன்.

டாக்டர் நண்பர்களுடன்

மேலும், காரைக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள உதவி தேவைப்படும் நபர்களுக்கு, தினமும் மளிகைப் பொருள்களையும் வழங்கிறோம். அதற்காக, தற்போது காரைக்குடி ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். இதில் ஏராளமான நண்பர்கள் என்னுடன் செயல்படுகின்றனர்” என்றார் உற்சாகமான குரலில்.

Must Read

தமிழர்களே ஜாக்கிரதை: இன்று லண்டனில் மகரந்த(பொலுன்) துகள் காற்றில் அதிகம்- அல்ர்ஜி வரலாம்

லண்டனிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் இன்று அளவுக்கு அதிகமாக பொலுன் என்று சொல்லப்படும் மகரந்த துகள்கள் காற்றில் அதிகமாக இருப்பதாக நுன் துகள் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. பலருக்கு இதனால் அலர்ஜி (ஒவ்வாமை)...

ஜல்ஜீரா முதல் பஜ்ஜிவரை… கொளுத்தும் வெயிலுக்கு கூலான நுங்கு ரெசிப்பீஸ்!

கோடைக்காலத்தின் குளுகுளு சுகங்களில் நுங்கு என்கிற ஐஸ் ஆப்பிளுக்கு முக்கிய இடமுண்டு. தினந்தோறும் சாப்பிட்டாலும் சலிக்காது. அதேபோல் பனங்காய்களைச் சீவி, நுங்கு அடிபடாமல் பதமாக எடுக்கிற லாகவமும் பார்க்கச் சலிக்காது. பனங்காயின் மேலே,...

`பாதிக்கப்படப்போவது நெசவாளர்களும்தான்!’ -மின்சாரத் திருத்தச் சட்டத்தால் கொதிக்கும் விவசாயிகள்

மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மின்திருத்தச்சட்டம் கார்ப்பரேட்களுக்காகக் கொண்டுவரப்படுகிறது. இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு அதற்கு, அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி ``மின் மோட்டாருக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து இறுதி அஞ்சலி...

`நாட்டின் முதல் நடமாடும் கொரோனா சோதனை மையம்..!’ – மகாராஷ்டிராவில் புதிய முயற்சி

கொரோனாவின் தாக்கம் நாளுக்குள்நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த ஆரம்ப நிலையிலேயே தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கொரோனாவின் தாக்கம் மற்ற நாடுகளில் உள்ள அளவுக்கு இந்தியாவில் இல்லை....

`புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது!’ – உச்ச நீதிமன்றம் உத்தரவு #NowAtVikatan

தொழிலாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது!உச்ச நீதிமன்றம்புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து ரயில் மற்றும் பேருந்துக் கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் உடனடியாக தங்களது சொந்த...