முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் ஆன்-லைன் பயிற்சியில் திடீரென தோன்றிய ஆபாச படங்கள்: கடுப்பான கோபிசந்த்!

ஆன்-லைன் பயிற்சியில் திடீரென தோன்றிய ஆபாச படங்கள்: கடுப்பான கோபிசந்த்!

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. இதற்கிடையில் இந்திய கூட்டமைப்பு மற்றும் இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சேர்ந்து ஆன்லைன் பயிற்சி ஏற்பாடு செய்திருந்தது. இதில் சுமார் 700க்கும் மேற்பட்டோர் வீடியோ காண்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டனர்.

21 நாட்கள்
சுமார் 21 நாட்கள் நடக்க திட்டமிடப்பட்டிருந்த இந்த பயிற்சியில் இந்தியாவின் உடன், இந்தோனேஷியாவின் சாந்தோசோ, சுரோடோ உள்ளிட்டோர் பயிற்சியாளர்களுக்கான செஷனில் கலந்து கொண்டனர். பயிற்சியாளர்களுடன் இதில் சில குழந்தைகள் , பெற்றோர்களும் பங்கேற்றானர்.

ஆபாச படங்கள்
இதற்கிடையில் இந்த பயிற்சி ஆன்லைனில் நடந்து கொண்டிருந்த போது திடீரென பல முறை ஆபாச படங்கள் தோனியதாக கூறப்படுகிறது. இதனால் கோபிசந்த் உள்ளிட்டோர் லாக் அவுட் செய்து வெளியேறிவிட்டதாக தெரிகிறது.

இந்த பயிற்சியில் கலந்து கொண்ட ஒருவர் கூறுகையில், “புது இந்தோனிஷ பயிற்சியாளர் சாந்தோசோ தான் இந்த சம்வத்துக்கு சாட்சி. முதலில் ஆபாச படங்கள் திரையில் தோன்றியது. பின் சிறிது நேரம் மறைந்தது. மீண்டும் தோன்றிது. இப்படியே பல முறை அந்த செஷன் முழுதும் இதே வேலையாக இருந்தது” என்றார்.

ஜூம் வீடியோ
ஜூம் வீடியோ கால் மூலம் இந்த பயிற்சி நடந்ததாக கூறப்படுகிறது. வீடியோ காண்பரன்ஸ்களுக்கு ஜூம் வீடியோ பாதுகாப்பற்றது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டம் ஜூமில் நடத்தப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொழில் நுட்ப கோளாறு
ஆனால் இந்த கூட்டத்தின் போது ஹாக் எதுவும் செய்யப்படவில்லை என்றும், சில தொழில்நுட்ப கோளாறு தான் இந்த மோசமான சம்பவத்துக்கு காரணம் என்றும் இந்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Must Read

இந்தியாவில் ஏப்ரல் மாதம் வேலை இழந்தவர்கள் 12 கோடி பேர்!!

கொரோனா உலகை தாக்கத் தொடங்கியதில் இருந்து வர்த்தகம் முடங்கி வருகிறது. உலகம் முழுவதும் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். தற்போது கொரோனா அச்சம் ஒவ்வொரு தனி மனிதனையும் ஆட்டுவித்து வருகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கை...

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்… ஜாம்பவான்களுடன் போட்டி போடும் ஓலா!

நெதார்லாந்து நாட்டைச் சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனமான எடெர்கோவை நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. எனினும், என்ன தொகைக்கு நிறுவனத்தை வாங்கியது என்பது பற்றிய தகவல்களை ஓலா நிறுவனம் வெளியிடவில்லை....

சென்னையில் சலூன் கடைகள் திறக்கப்படும்..! ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

நாடு முழுக்க நான்காம் கட்ட அமலில் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் ஒப்புதலின்படி படிப்படியாக தளர்வுகளை கையாண்டு வருகிறது. 3ம் கட்ட பொதுமுடக்கம் வரையில் திறக்கப்படாமல் இருந்த மதுக்கடைகள், ,...

குமரியிலிருந்து உ.பி.க்கு கிளம்பிய தொழிலாளர்கள், வழியனுப்பி வைத்த காங்கிரஸார்!

மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில்வே ஒருங்கிணைப்பு குழு சார்பில் உணவு தண்ணீர் போன்றவை வழங்கப்பட்டு வழி அனுப்பி வைக்கப்பட்டனர். பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில்...

ஹேக்கர் செய்த விஷமத்தால் நேற்றிரவு தூக்கத்தை தொலைத்த பிரபல நடிகை

ஜீவாவின் முகமூடி படம் மூலம் நடிகையானவர் மும்பையை சேர்ந்த . அவர் ரித்திக் ரோஷன் ஜோடியாக மொஹன்ஜதரோ பாலிவுட் படத்தில் நடித்தார். மேலும் ஃபர்ஹத் சம்ஜியின் ஹவுஸ்ஃபுல் 4 இந்தி படத்திலும் நடித்தார். த்ரிவிக்ரம்...