முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் இணையத்தில் படு வைரலாகும் ஹன்சிகாவின் நீச்சல் உடை புகைப்படம்

இணையத்தில் படு வைரலாகும் ஹன்சிகாவின் நீச்சல் உடை புகைப்படம்

பப்லி லுக், கியூட் எக்ஸ்பிரஷன்கள் என தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் மோத்வானி. இவர் மும்பையை சேர்ந்தவர் என்றாலும் அதிகம் தென்னிந்திய படங்களில் தான் நடித்துள்ளார்.

தற்போது கைவசம் மஹா, பார்ட்னர் ஆகிய தமிழ் படங்களை வைத்திருக்கிறார் ஹன்சிகா. மஹா படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. சிம்பு அந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா லாக்டவுனில் ஹன்சிகா தனது வீட்டில் தான் நேரத்தினை செலவிட்டு வருகிறார். தற்போது வெளியில் எங்கும் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் வருத்தத்தில் இருக்கும் அவர் தான் முன்பே வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்களை அவர் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஹன்சிகா வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி கொண்டிருக்கிறது. அவர் மாலத்தீவு சென்ற போது எடுத்த புகைப்படம் அது.

அந்த நீச்சல் உடையில் இருக்கும் டிசைன் தான் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்த போட்டோவுக்கு கமெண்ட் செய்துள்ள நடிகை ஸ்ரேயா ரெட்டி ‘நீ டிரஸ் போட்டிருக்கனு ஒரு செகண்ட் நெனைச்சிட்டேன்’ என கூறியுள்ளார். அந்த நீச்சல் உடை வழக்கமானாது போல இல்லாமல், மற்ற உடைகள் போல வடிவமைக்கப்பட்டிருந்தது தான் அவர் அப்படி நினைக்க காரணம்.

ரசிகர்கள் பலரும் வாவ் என்று தான் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரே நாளில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அந்த போட்டோவை லைக் செய்த்துள்ளனர்.

ஹன்சிகா படங்கள் ஒப்புக்கொள்வதை குறைத்துக்கொண்டாலும் தற்போதும் சமூக வலைதளங்களில் பிஸியாகத்தான் இருக்கிறார். சமீபத்தில் அவரது கியூட்டான் ரியாக்ஷன்களை எமோஜியாக சமூக வளைத்தளங்களில் அறிமுகப்படுத்தி இருந்தார். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அதன் பிறகு கொரோனா லாக் டவுனில் நேரத்தினை வீணாக்காமல் அவர் சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் துவங்குவதாகவும் அறிவித்தார் அவர். என்னுடைய வாழ்க்கையையும், என் உண்மையான பக்கத்தையும் அறிந்துகொள்ள தயாராக இருங்கள் என ரசிகர்களுக்கு அந்த சேனல் பற்றி கூறியிருந்தார் அவர்.

ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் மஹா படத்தினை யூ.ஆர்.ஜெமீல் இயக்கி வருகிறார். தற்போது கொரோன லாக்டவுனால் அதன் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

அடுத்து பார்ட்னர் என்ற படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடிக்கிறார் ஹன்சிகா. அந்த படத்தின் பூஜை இதற்கு முன்பே நடைபெற்றது. இயக்குனர் சற்குணத்தின் முன்னாள் உதவியாளர் மனோ தாமோதரன் தான் இந்த படத்தினை இயக்கி வருகிறார்.

Must Read

யாழ் விடத்தற்பளை முகாமில் 51 கடற்படையினருக்கு கொரோனா: யாழ் மக்கள் அச்சம்

யாழ். கொடிகாமம் விடத்தற்பளை முகாமில் தனிமைப் படுத்தப்பட்ட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த 51 பேரும் கடற்படை சிப்பாய்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமில் 260 கடற்படை சிப்பாய்கள்...

உள்பக்கமாக பூட்டி பதுங்கிய அமெரிக்க பொலிசார்: வெடித்தது பெரும் கலவரம்

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியாகிய வீடியோ, இன்று அமெரிக்காவில் பெரும் கலவரத்தை உண்டாகியுள்ளது. கறுப்பின நபர் ஒருவரை வெள்ளையின பொலிசார் கைது என்ற போர்வையில் காலல் நசுக்கி கொலை செய்து இருந்த...

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் திமுகவினரின் மதுபான ஆலைகளும் மூடப்படும்: டி.கே.எஸ். சாமர்த்திய பதில்!!

எம்.பி.யான டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் குழு, தமிழக தலைமைச் செயலாளரை சமீபத்தில் சந்தித்தனர். திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ஒரு லட்சம்...

ப்ளஸ்2 மாணவர்களுக்கு போனஸ் மார்க், தேர்வுத்துறை உத்தரவு!

தமிழ்நாட்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட ஒரு பிழைக் காரணமாகக் குறிப்பிட்ட மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம்...

திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல – தேவஸ்தான நிர்வாகம் முடிவு

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக அளித்த 50 சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து...