முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் இதுவரை இல்லாத புதிய உச்சம்; இந்தியாவை ரவுண்ட் கட்டும் கோவிட்-19!

இதுவரை இல்லாத புதிய உச்சம்; இந்தியாவை ரவுண்ட் கட்டும் கோவிட்-19!

மாநில அரசுகள் அளித்த தகவலின்படி, இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 1,29,539 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை நேற்று 144ஆக பதிவானதால் மொத்த பலி 3,870ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 7வது நாளாக 130க்கும் மேற்பட்ட பலி எண்ணிக்கை பதிவாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. நேற்றைய தினம் புதிதாக 6,378 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்றைய தினம் வைரஸ் தொற்று புதிதாக 2,608 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இது முந்தைய நாளில் பதிவான 2,940 என்ற எண்ணிக்கையை விட குறைவாகும். இம்மாநிலத்தில் தொடர்ந்து 7வது நாளாக 2,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

நேற்றைய பதிவான புதிய பாதிப்புகள் இரண்டாவது புதிய உச்சம் ஆகும். மும்பையில் மட்டும் 1,566 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு 47,190ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் தற்போது 28,634 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 60 பேர் பலியாகியுள்ளனர். இதில் மும்பையில் மட்டும் 40 பேர் அடங்குவர். கடந்த 24 மணி நேரத்தில் 42 பேர் கொரோனா பாதிப்பிற்கு பலியானவுள்ள நிலையில், எஞ்சிய 18 பேர் கடந்த 15 நாட்களில் பலியானது குறிப்பிடத்தகக்து.

இதன்மூலம் மொத்த பலி 1,577ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் 216, உத்தரகாண்ட் 92 என பல்வேறு மாநிலங்களில் கோவிட்-19 பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் 759, டெல்லியில் 591, 282, ராஜஸ்தான் 248, உத்தரப் பிரதேசம் 282, பீகார் 228ஆக புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நேற்று மட்டும் 27 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. சிக்கிம் மாநிலத்தில் முதல் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் தான் வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Must Read

உணவகங்களில் ஏ.சி.யை இயக்கலாமா? – மத்திய அரசு சொல்வது இதுதான்!!

பொதுமுடக்கத்தின் காரணமாக, நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உணவகங்களை ஜூன் 8 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சனிக்கிழமை (மே 30)...

கர்ப்பிணி யானை செத்தது எப்படி? இறுதி அறிக்கை வெளியீடு!

கேரளா பாலக்காடு மாவட்டத்தில் அண்ணாச்சிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொலை செய்யப்பட்ட யானை எதனால் உயிரிழந்தது என சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கேரள அரசு அறிக்கை...

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா!!

சென்னையில் உடல்நலம் குறைவால் அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த நபரின்...

‘இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது’

நாடாளுமன்ற இரு அவைகளின் செயலக அலுவலக பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றும் நாடாளுமன்ற அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில அதிரடி...

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...