முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் இது தான் கொரோனா வைரஸா? முதல் புகைப்படம் வெளியீடு!

இது தான் கொரோனா வைரஸா? முதல் புகைப்படம் வெளியீடு!

சென்னை: கோவிட்-19 தொற்று நோய்க்கு காரணமாக கொரோனா வைரஸின் முதல் புகைப்படத்தை நாட்டின் தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொற்றானது கொரோனா வைரஸால் ஏற்படுகிறது. இதற்கு Severe acute respiratory syndrome (SARS) கொரோனா வைரஸ் 2 அல்லது Sars-CoV-2 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் கோவிட்-19 தொற்றானது மூக்கு மற்றும் தொண்டை உள்ளிட்ட மேல் சுவாசக்குழாயில் இருக்கும் போது மட்டுமே அது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதுவே, கீழ் சுவாசக்குழாயை தாக்கும் போது சிக்கல்கள் ஏற்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரத்தை மையமாக கொண்டு உலகம் முழுவதும் தற்போது பல உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கி வருகிறது. இந்த நோய்த் தொற்றால் சர்வதேச அளவில் 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நயவஞ்சக வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக மருத்துவ வல்லுநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கோவிட்-19 தொற்று நோய்க்கு காரணமாக கொரோனா வைரஸின் முதல் புகைப்படத்தை பிரான்ஸ் நாட்டின் தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தேசிய சுகாதாரம் மற்றும மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான (Institut national de la santé et de la recherche médicale) Covid-19 தொற்றுநோய்க்குக் காரணமான SARS-CoV-2 வைரசின் படத்தினை உலகில் முதன்முறையாக வெளியிட்டுள்ளது.

மனிதனின் சுவாசத் தொகுதியைப் பாதிக்கும் இந்த வைரசின் படத்தினைத் தனிமைப்படுத்தபட்ட கொரோனா நோயளியி ஒருவரிடமிருந்து பெற்றுள்ளனர். இந்த தகவலை Inserm நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Must Read

பிரிட்டன் பிரதமரின் கர்ப்பம் தரித்த பெண் நண்பிக்கும் கொரோனா!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பெண் நண்பி தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது தாயுடன் தங்கி வருகிறார். பிரிட்டன் பிரதமர் (வயது 55) கொரோனா தொற்றுக்கு முன்பு...

`கொரோனா தாக்கம்’ – எப்படி இருக்கிறது திருப்பூர் தொழில்துறை? #MyVikatan

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!கொரோனாவின் கோரப்பசி உலகெங்கும்...

`வீட்டிலேயே முடங்கிக் கிடந்தா சோறு கிடைக்காது..!’ -சாத்தூர் பைபாஸில் கவனம் ஈர்த்த முதியவர்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உலகமே அதிர்ந்து போயுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன....

`மதுவுக்காக கிணற்றுக்குள் குதித்த தொழிலாளி!’ – வாளிக்குள் குவார்ட்டரை அனுப்பி கெஞ்சிய மக்கள்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக மது கிடைக்காமல் குடிமகன்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை...

கொரோனா வைரஸ் எதிரொலி! – வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு #Corona #NowAtVikatan

வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு!வாட்ஸ் அப்பில் மற்றவர்களுக்குத் தகவல்களைப் பகிர புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதிகம் முறை பகிர்ந்த தகவலை 5 நபர்களுக்குப் பதிலாக இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும். கொரோனா வதந்தியைத்...