முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் இந்தியாவில் ஏப்ரல் மாதம் வேலை இழந்தவர்கள் 12 கோடி பேர்!!

இந்தியாவில் ஏப்ரல் மாதம் வேலை இழந்தவர்கள் 12 கோடி பேர்!!

கொரோனா உலகை தாக்கத் தொடங்கியதில் இருந்து வர்த்தகம் முடங்கி வருகிறது. உலகம் முழுவதும் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர்.

தற்போது கொரோனா அச்சம் ஒவ்வொரு தனி மனிதனையும் ஆட்டுவித்து வருகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

அன்றாட கூலித் தொழிலாளர்களின் நிலையை விவரிக்கவே வேண்டாம். புலம் பெயர்ந்த அன்றாட தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள், தங்களது சொந்த ஊரை நோக்கி சென்று கொண்டுள்ளனர். தற்போது அன்றாட உணவுக்குக் கூட இல்லாமல், செல்லும் வழியிலே இறப்பது, ரயிலில் செல்லும்போது இறப்பது என்று கண்ணீர் வரவைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

புளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12.2 கோடி பேர் வேலை வாய்ப்பை இழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

தினக் கூலிகள், சிறு குறு தொழிலில் ஈடுபட்டு இருந்தவர்கள், சாலைகளில் சிறு தொழிலில் ஈடுபட்டு இருந்தவர்கள், கட்டிட தொழிலாளர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள் என்று இந்தப் பட்டியல் நீளுகிறது.

ஐபிஇ குளோபல் மேலாண்மை இயக்குநர் அஸ்வஜித் சிங் அளித்திருக்கும் பேட்டியில், ”வேலை வாய்ப்பை அதிகரிக்க மத்திய அரசு எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாகியுள்ளது. இதற்குக் காரணம் வைரஸ். இந்தாண்டு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று நான் கருதவில்லை. வைரஸால் அதிகம் பேர் இறப்பதைவிட பசிக்குத்தான் அதிகம் இறப்பார்கள்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் உள்ள நாடுகளில் ஒரு நபரின் குறைந்தபட்ச ஒரு நாள் வருமானம் ரூ. 247 என்று உலக வங்கி நிர்ணயித்துள்ளது. இவர்கள் எல்லாம் வறுமை கோட்டில் இருப்பவர்கள். இதற்கும் கீழே வருமானம் பெறும் வகையில் இந்தியாவில் 104 மில்லியன் பேர் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி கணித்துள்ளது.

அதாவது கொரோனாவுக்கு முன்பு 60% பேர் அல்லது 812 மில்லியன் பேர் வறுமை கோட்டில் இருந்தனர். இது 68% அல்லது 920 மில்லியன் பேர் என்று அதிகரிக்கும். அதாவது வறுமை கோட்டில் இருந்து கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்கு மீண்டும் இந்தியா திரும்புகிறது என்ற துர்பாக்கிய நிலை ஏற்பட உள்ளது.

மிகவும் ஏழைகள் வாழும் நாடு என்ற கட்டத்தில் இருந்து இந்தியா மீண்டு வரும் நிலையில் மீண்டும் பேரிடர் போல் கொரோனா தாக்கம் ஏற்பட்டு வேலை வாய்ப்பை ஏழைகள் இழந்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் சமீபத்தில் இந்திய கிராமங்களில் மேற்கொண்ட ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 27 மாநிலங்களில் 5800 வீடுகளில் இந்த மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதில் 80% பேர் தங்களது வருமானத்தை இழந்து இருப்பதாகவும், இந்த நிலை நீடித்தால், தாக்குப் பிடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது மத்திய அரசு விவசாயிகளுக்கு அறிவித்து இருக்கும் பணம் போதாது. இதேபோல் ஏழைகளுக்கு மாதம் ரூ. 500 என்று அறிவித்துள்ளது அதுவும் போதாது. மாதம் ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை என்று அறிவித்துள்ளது. அதுவும் போதாது. தற்போது மக்கள் எந்த வாழ்வாதாரமும் இல்லாமல் தங்களது சொந்த ஊரை நோக்கி சென்று கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு சொந்த ஊரில் வாழ்வாதாரம் இருக்கப் போவதில்லை. வருமானத்துக்கு என்ன செய்வார்கள், உணவுக்கு என்ன செய்வார்கள். அவசர செலவுக்கு என்ன செய்வார்கள். குழந்தைகளை எப்படி படிக்க வைப்பார்கள் என்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டுமின்றி, வருமானம் இன்றி, உணவின்றி தவிக்கும் மக்கள் கெட்டுப் போன பழங்கள், காய்கறிகள், இறந்த எலிகள், இலை தழைகளை சாப்பிட்டு வருவதாக தெரிவித்து இருப்பது இன்னும் கவலை அளிப்பதாக இருக்கிறது.

ஏற்கனவே பொருளாதாரம் கடந்த பத்து ஆண்டுகளாக படுத்த நிலையில் மார்ச் மாதம் வெடித்துள்ள கொரோனா பாதிப்பும் இந்தியாவை பின்னோக்கி செல்ல வைத்துள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நாடு முழுவதும் லட்சக்கணக்கில் ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். அடுத்த மாதமே தொழிற்சாலைகள் திறக்கப்பட்டாலும், தொழிலாளர்கள் இல்லை என்ற நிலைதான் உருவாகியுள்ளது.

இன்னும் சரியாக இரண்டு ஆண்டுகள் வரை ஆகும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், தங்களது சொந்த இடங்களுக்கு சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவ்வளவு எளிதில் திரும்பப் போவதில்லை. சொந்த மாநிலத்திலும் இவர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் இருக்கிறதா என்றால் அதுவும் காலப் போக்கில்தான் தெரிய வரும்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீள நாட்டுக்கு 265 பில்லியன் டாலர் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% ஒதுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். ஆனால், எந்தளவிற்கு பொருளாதார அழிவு ஏற்பட்டதோ அந்தளவிற்கு நிதியை மத்திய அரசு இன்னும் ஒதுக்கவில்லை, ஒதுக்கிய பணமும் மக்களை சென்றடையவில்லை என்ற கருத்துதான் எழுந்துள்ளது. மக்களின் செலவிடும் மனப்போக்கும் நாளுக்கு நாள் குறையும் என்றே கணிக்கப்படுகிறது. சம

Must Read

இந்தி நடிகை திவ்யா சவுக்சே: புற்றுநோயால் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் நடிகை திவ்யா சவுக்சே (28). நடிகையான பின்னர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் திவ்யா சவுக்சே வசித்து வந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் ஹை அப்னா...

வாழ்த்துங்களேன்!

14.7.20 முதல் 27.7.20 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத...

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...