முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் இந்தியாவில் குறையும் கோவிட்-19 இரட்டிப்பு விகிதம்- நம்பிக்கையூட்டும் புள்ளிவிவரம்!

இந்தியாவில் குறையும் கோவிட்-19 இரட்டிப்பு விகிதம்- நம்பிக்கையூட்டும் புள்ளிவிவரம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதேசமயம் முகக் கவசம், சானிடைசர், போதிய சரீர இடைவெளி உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் பாதிப்பு இரட்டிப்பாகும் நாட்கள் 3.4ல் இருந்து 7.5ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் வைரஸ் பரவும் வேகம் குறைந்துள்ளது தெரிகிறது. தற்போது 18 மாநிலங்களில் வைரஸ் பரவலின் இரட்டிப்பு விகிதம் தேசிய சராசரியான 7.5ஐ விட அதிகமாகக் காணப்படுகிறது.

குறிப்பாக கேரளா மற்றும் ஒடிசாவில் இரட்டிப்பு விகிதம் 30 நாட்களுக்கும் மேலாக இருக்கிறது. அதாவது கேரளாவில் 72.2 நாட்களிலும், ஒடிசாவில் 39.8 நாட்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இரண்டு மடங்காக மாறுகிறது. இது வைரஸ் தொற்று குறைந்த அளவில் மட்டும் இருப்பதை உணர்த்துகிறது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் கூறுகையில், கோவிட்-19 பாதிப்பின் இரட்டிப்பு விகிதம் என்பது கடந்த 7 நாட்களில் ஏற்பட்ட வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது என்றார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரட்டிப்பு விகிதம் 20 நாட்களை விட குறைவாக இருக்கும் பகுதிகள் பற்றி இனி காணலாம்.

* டெல்லி – 8.5 நாட்கள்
* கர்நாடகா – 9.2 நாட்கள்
* தெலங்கானா – 9.4 நாட்கள்
* ஆந்திரப் பிரதேசம் – 10.6 நாட்கள்
* ஜம்மு காஷ்மீர் – 11.5 நாட்கள்
* பஞ்சாப் – 13.1 நாட்கள்
* சட்டீஸ்கர் – 13.3 நாட்கள்
* தமிழ்நாடு – 14 நாட்கள்
* பீகார் – 16.4 நாட்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பின் இரட்டிப்பு விகிதம் 20 நாட்கள் முதல் 30 நாட்களாக இருக்கும் பகுதிகளைக் காணலாம்.

* அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் – 20.1 நாட்கள்
* ஹரியானா – 21 நாட்கள்
* ஹிமாச்சல் பிரதேசம் – 24.5 நாட்கள்
* சண்டிகர் – 25.4 நாட்கள்
* அசாம் – 25.8 நாட்கள்
* உத்தரகாண்ட் – 26.6 நாட்கள்
* லடாக் – 26.6 நாட்கள்

கடந்த சில நாட்களாக முற்றிலும் வைரஸ் பாதிப்பு ஏற்படாத இடங்கள் பட்டியலில் ஏராளமான மாவட்டங்கள் இணைந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக கடந்த 28 நாட்களில் புதுச்சேரியில் உள்ள மாஹி, கர்நாடகாவில் உள்ள குடகு, உத்தரகாண்டில் உள்ள பவுரி கார்வால் ஆகிய மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

கடந்த 14 நாட்களில் 23 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 59 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் வைரஸ் பாதிப்பு உண்டாகவில்லை. கோவாவில் வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அனைவரும் குணமாகி வீடு திரும்பி விட்டதாக அகர்வால் தெரிவித்துள்ளார். நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 17,265 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களில் 14,175 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,553 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. புதிதாக 36 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன்படி 14.75 சதவீதம் பேர் குணமடைந்திருப்பது தெரிகிறது. ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸில் இருந்து பலரும் குணமாகி வருவது நமது நாட்டில் சிறப்பான சுகாதார வசதிகள் இருப்பதைக் காட்டுகிறது என்று அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.

Must Read

தேர்தல் நேரத்தில் இந்துமதத்தை நேசிக்கும் சார்ள்ஸ்!

தேர்தல் நேரத்தில் இந்துமதத்தை நேசிக்கும் சார்ள்ஸ்; பேசும் படம்!

இப்போது 3 கோடி மொத்தம் 8 கோடி; சிவமோகனிடமிருந்து வன்னி மக்களை காப்பாற்ற கடவுள்தான் வரவேண்டும்!

தேர்தல் வருகிற ஆவணி மாதம் 5-ம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வவுனியாவில் தனது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்தபெண்ணை கற்பழித்த சி.சிவமோகன் தற்போதுவரை 3கோடியே 67 லட்ஷம் ரூபாய் வரை செலவளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,...

Corona Live Updates: `முதல்வருக்கு கொரோனா பரிசோதனை… ரிசல்ட் நெகட்டிவ்’ – தமிழக அரசு

முதல்வருக்கு நெகட்டிவ்:முதல்வர் எடப்பாடி பழனிசாமிதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாலும் அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...

விசாக பட்டினத்தில் பெரும் தீ விபத்து: பொது மக்கள் அச்சம்!

விசாகப்பட்டினம் பார்மா சிட்டியில் செயல்படும் விசாகா சால்வெண்ட்ஸ் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

சும்மா மெஜாரிட்டினு சொல்லாதீங்க; இதையும் செஞ்சு காட்டுங்க – ராஜஸ்தான் பாஜக!

ராஜஸ்தான் மாநிலத்தின் அரசியல் சூழல் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பாஜக முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.