முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் இந்தியாவுக்கு இதுதான் சரியான நேரம்: அரவிந்த் பனகரியா!

இந்தியாவுக்கு இதுதான் சரியான நேரம்: அரவிந்த் பனகரியா!

வைரஸ் பாதிப்பால் ஒட்டுமொத்த உலகமே ஆட்டம் கண்டுள்ளது. கொரோனா பாதிப்பால் முதலில் பெரும் பாதிப்பைச் சந்தித்தது சீனாதான். சீனாவில் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தாலும் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதோடு, பொருளாதார அளவில் அந்நாடுகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இந்த ஆண்டில் கொரோனா பாதிப்பால் உலகப் 0.2 சதவீதம் வரையில் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரையில், இந்த 2020-21 நிதியாண்டில் 2 சதவீத வளர்ச்சி கூட இருக்காதென்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்கு இந்தியாவில் உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் உள்நாட்டு உற்பத்தியும் வெளிநாட்டு ஏற்றுமதியும் முடங்கி பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியமே இல்லாத சூழல் நிலவுகிறது. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதைவிட மக்களின் உயிரே முக்கியம் எனக் கூறிய மத்திய அரசு, மக்களின் பாதுகாப்பில் அக்கரை செலுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவைக் கடுமையாகக் கடைபிடித்து வருகிறது. ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பிறகு சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ள மத்திய அரசு, நாட்டின் வளர்ச்சிக்கான அடுத்தகட்ட பணியில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்தியப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு இதுவே சரியான நேரம் என்று பொருளாதார வல்லுநரான தெரிவித்துள்ளார். நிதி ஆயோக்கின் துணைத் தலைவராகப் பணியாற்றிய இவர், தற்போது கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வேலைவாய்ப்புகளை அதிகமாக உருவாக்கி முன்னேறிச் செல்ல இந்தியாவுக்கு இதுவே சரியான நேரம் என்று அரவிந்த் பனகரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், ”தற்போது ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழலானது வேலைகளை அழித்து வேலையாட்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இந்தியப் பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது. இப்போதுதான் இந்தியா நீண்ட கால அடிப்படையில் யோசித்துச் செயல்பட வேண்டும். இந்த நோய்க்குச் சரியான மருந்து கண்டுபிடிக்கும் வரை நிலைமை சரியாகாது. எனவே அதைத் தாண்டி நாம் யோசிக்க வேண்டும். 70 ஆண்டு வளர்ச்சிக்குப் பிறகும் நம் நாட்டு மக்களுக்குப் போதிய வேலைவாய்ப்புகள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 7 கோடிப் பேரிடம் அரை ஏக்கருக்கும் குறைவான அளவில்தான் நிலம் இருக்கிறது. பலர் தங்களது அன்றாடக் கூலிக்கே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவுக்கு நல்ல பாடத்தைப் புகட்டியுள்ளது. நிலையான, அமைப்பு சார்ந்த துறைகளில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி நாம் திடமுடன் இருக்க வேண்டும் என்பதைப் புரியவைத்துள்ளது. நீண்ட கால வளர்ச்சியை மையாக வைத்து முன்னேறிச் செல்ல வேண்டும். சீனாவிடமிருந்து அதிக வர்த்தக வாய்ப்புகள் இந்தியாவை எதிர்நோக்கியுள்ளன. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்தியா வளர்ச்சிப் பாதைக்குத் திரும்ப வேண்டும்” என்று ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Must Read

இன்னும் சில மணி நேரங்களில் இருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் விபரங்கள்

இன்று(06) இலங்கை நேரப்படி மதியம் 3 மணி முதல், தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பிக்கும். உடனுக்கு உடன் வெற்றிபெற்றவர்கள் யார் என அறிந்து கொள்ள அதிர்வு செய்திகளோடு இணைந்திருங்கள். நாம் உடனுக்கு உடன்...

துறைமுக கிடங்கில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததே காரணம் பெய்ரூட் குண்டுவெடிப்பு பலி 100 ஆனது: 4,000 பேர் படுகாயம்; வீடுகள் மீது உடல் பாகங்கள்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 4,000க்கும் மேற்பட்டோர்காயம் அடைந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில்...

ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்று பெரிய கொண்டாட்டங்களில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 20 அகவை இளைஞன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை தொற்று பலருக்கு இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களோடு நெருங்கிய தொடர்பில்...

வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, வுகான் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாங்னான் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனாவில் இருந்து மீண்ட...

கொரோனா கதியில் இருந்து மீண்டதா? இன்னமும் திணறுகிறது அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு

நியூயார்க்: மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்று அதிபர் டிரம்ப் என்னதான் சொன்னாலும், உண்மையில் நிலைமை வேறாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது...