முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் இனி சூர்யா படங்களை திரையிட மாட்டோம்: OTT ரிலீஸுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு

இனி சூர்யா படங்களை திரையிட மாட்டோம்: OTT ரிலீஸுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு

நடித்துள்ள பொன்மகள் வந்தால் திரைப்படத்தை தியேட்டர்களில் வெளியிடாமல் நேரடியாக தளத்தில் வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இரண்டு மடங்கு லாபத்திற்கு அமேசான் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. கொரோனா பிரச்சனை காரணாமாக மூடப்பட்டுள்ள தியேட்டர்கள் மீண்டும் திறக்க இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும் என்பதால் தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதை அறிந்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.பன்னீர் செல்வம் சூர்யாவின் நிறுவனத்திடம் போன் செய்து பேசினாராம். ஆனால் அவர்கள் எதையும் கேட்பதாக இல்லை, நேரடி டிஜிட்டல் ரிலீஸ் என்பதில் உறுதியாக உள்ளார்களாம். சென்னையில் முன்னணி தியேட்டரான ரோகிணி தியேட்டரின் உரிமையாளர் தான் ஆர்.பன்னீர் செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி பேசியுள்ள பன்னீர் செல்வம், “நாங்கள் வேண்டாம் என சொன்னால் அவர்கள் கேட்கவில்லை. இதை மீறி அவர்கள் OTTயில் ரிலீஸ் செய்தால், இனி அந்த நிறுவனம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் எடுக்கும் படங்கள் அனைத்தையும் OTTயிலேயே ரிலீஸ் செய்து கொள்ளுங்கள், எங்கள் தியேட்டர்களுக்கு உங்கள் படங்கள் வேண்டாம் என கூறிவிட்டோம்” என தெரிவித்துள்ளார்.

இதனால் சூர்யாவிற்கு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படம் ரிலீஸுக்கு தயாராகி இருக்கும் நிலையில், இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பு உள்ளது என சினிமா துறையினர் கூறுகின்றனர்.

Must Read

1528-ல் பாபர் மசூதி… 2020-ல் ராமர் கோயில்… 492 ஆண்டு வரலாற்றுச் சுருக்கம்! #AyodhyaRamMandir

இன்று பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பதற்கான பூமி பூஜையை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். பல சர்ச்சைகள், வழக்குகள் என நீண்ட நெடிய வரலாறு கொண்ட அயோத்தி நிலத்தின்...

லெபானானின் பெய்ரூட் நகரையே உருக்குலைத்த  மிகப்பெரிய வெடிவிபத்து: 70 பேர் பலி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் : என்ன காரணம்?

லெபானான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரில் நேற்று இதுவரை கண்டிறாத வகையில் மிக்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டு நகரையே உருக்குலைத்து, சின்னாபின்னமாக்கியது. இதில் முதல்கட்ட தகவலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்...

லெபானானில் 2750 டன்கள் அமோனியம் நைட்ரேட் வெடித்ததில் 73 பேர் பலி; 3,700 பேர் காயம்

பெய்ரூட், : லெபானானில் 2750 டன்கள் அமோனியம் நைட்ரேட் வெடித்ததில் 73 பேர் பலியாகினர்.லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் அப்பகுதி முழுவதும் தீப்பிழம்புகளும்...

அடித்துச் சென்றது கடல்- ஆனால் ரவிராஜ் TVல் பார்த்த நிகழ்ச்சி ஒன்றைப் போல கைகளை அகட்டி மிதந்து தப்பித்தார்

கனடா ஸ்காபரோவில் உள்ள கடல் ஒன்றில் குளித்துக் கொண்டு இருந்தார் ரவிராஜ் சைனி என்னும் 10 வயது சிறுவன். திடீரென கிளம்பி வந்த பெரிய அலை ஒன்று அவனை அப்படியே கடலுக்குள் இழுத்துச்...

மர்மமாக காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட முல்லைத்தீவு குடும்பஸ்தர் : என்ன நடந்தது ?

கனடாவில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத்தர் கடந்த வியாழக்கிழமை எரிபொருள் நிலையத்துக்கு அருகில் அவருடைய காரில் இருந்து சடலமாக...