முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் "இப்போ மோடிக்கு 20 ஆயிரம் கோடில வீடு வேணுமா?"

“இப்போ மோடிக்கு 20 ஆயிரம் கோடில வீடு வேணுமா?”

கொரோனா ஊரடங்கு பணிகளை மேற்கொள்ள மருத்துவர்கள்தான் தேவை என்றும் திமுக கட்சித் தலைவர்கள் உள்பட எதிர்க்கட்சிகள் என்ன மருத்துவர்களா என்றும் முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதற்குத் தெளிவான பதிலை விழுப்புரம் எம்பி ரவிக்குமார் அளித்துள்ளார்.

எம்பி ரவிக்குமார் கூறியதாவது:
எதிர்க்கட்சி தலை அவர்களெல்லாம் மருத்துவர்களா? அவர்களோடு ஆலோசித்து என்ன நடக்கும் என முதல்வர் கேட்பதற்கு முன், அவருடன் இருக்கும் அமைச்சர்களெல்லாம் மருத்துவர்களா? இல்லை ஐஏஎஸ் அதிகாரிகள் எல்லாம் மருத்துவர்களா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களுடன் ஆலோசிப்பது நிச்சயம் அவசியம் அதே நேரத்தில் அனைவரும் இதில் பொறுப்பு உள்ளது என்பதை முதல்வர் உணர வேண்டும்.

கொரோனா தொற்று மருத்துவத் துறைக்கு மிகப் பெரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது. அதே நேரத்தில் நாட்டின் பொருளாதாரத்திற்கும், ஏன் சமூகத்திற்கும் கூட மிகப்பெரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது என்பதை உணர்ந்து பேச வேண்டும். மருத்துவத் துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள் பிற பிரச்சினைகளையும் கையாள்வதில் அரசு ஆர்வம் காட்ட வேண்டும். இவையெல்லாம்தான் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட சொல்வதற்கான காரணம்.

இதுபோன்ற நேரத்தில் அரசு மக்களுக்கு உதவித் தொகையாக ரூ. 10 ஆயிரம் வரை வழங்க வேண்டும். இதை அளிப்பதால் அரசுக்குப் பெரிய பிரச்சினை எதுவும் கிடையாது. இந்த தொகையை எப்படி வழங்குவது என முன்னாள் நிதி அமைச்சர் பா சிதம்பரம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு இந்த நேரத்தில் பிரதமர் மோடிக்கு ரூ. 20 ஆயிரம் கோடியில் வீடு தேவையா? இதையெல்லாம் இப்போதைய நேரத்தில் ஒதுக்கி வைத்து விட்டு மக்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

அப்படி மக்களுக்குப் பணம் கொடுப்பதால்தான் பொருளாதாரத்தை உயிர்த்து வைத்திருக்க முடியும். மக்களின் உயிர்களை உயிர்த்து வைத்திருக்க முடியும்.

நாட்டில் பலர் வழியில்லாமல், உணவில்லாமல் தங்கள் சொந்த ஊருக்குப் பயணம் மேற்கொண்டு நடந்தே உயிரை விடுகிறார்கள். மக்கள் இப்படி பசியால் செத்து மடியும் இந்த நேரத்தில் தேசிய உணவு தானிய கிடங்கில் எலிகள் அதிகரித்து விட்டதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதையெல்லாம் பேசாத மோடி, கைதட்டுங்கள், விளக்கு ஏற்றுங்கள் என்கிறார்.

பேரிடர் காலத்தில் ஒரு பிரதமரைப் போல மோடி நடந்து கொள்ளவில்லை. மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடிக்க முயல்வது, தாமதமாக ஊரடங்கை அமல்படுத்துவது என முறையான திட்டங்கள் இல்லாமல் மக்களையும் மாநில அரசுகளையும் நெருக்கடிக்குத் தள்ளும் நிலைக்கு மத்திய அரசு தள்ளியுள்ளது.

முழு அடைப்பு மூலமாகத்தான், நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்பது ஒருபாதிதான். மறுபக்கத்தில் அரசு இந்த அவசர நிலைக்குத் தயாராகும் பணிகளைச் செய்ய வேண்டும். மருத்துவ படுக்கைகளை அதிகரிப்பது உள்பட கொரோனா தீவிரமடைந்தால் தேவையான வசதிகளை உருவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இப்போதைய நேரத்தில் மத்திய அரசு நமது மாநிலத்திற்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கியான ரூ. 12 ஆயிரம் கோடியை வழங்கினாலே தமிழ்நாடு அரசு எளிதாகத் தனது பணிகளைச் செய்து முடித்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Must Read

ராமர் கோயில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு இன்று கொரோனா!

பாபர் மசுதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட புராணங்களை சான்றாக வைத்து உத்தரவு பிறபித்தவர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கொகாய்...

கோவை: கொட்டும் மழை; உடையும் தடுப்பணை கான்கிரீட்; பறக்கும் கழிவு நுரை! மக்கள் வேதனை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த இரண்டாண்டுகள் தென்மேற்கு பருவமழை சிறப்பாகவே இருந்தது. ஆனால், நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பெரிய அளவுக்கு கைக்கொடுக்காமல் இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக...

`ஏழாவது இடத்த நான் எதிர்பார்க்கல!’ – ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த கணேஷ்குமார்

ஐ.ஏ.எஸ் தேர்வில் ஏழாம் இடத்தை பிடித்துள்ளார் நாகர்கோவில் புன்னை நகரில் வசிக்கும் கணேஷ்குமார். முதல் முறை தேர்வு எழுதி தோல்வியடைந்த கணேஷ் குமார், இரண்டாவது முறை தீவிரமாகப் படித்துத் தேர்வு எழுதி, இந்திய...

#Ayodhya : `கோயிலுக்குள் அனுமதி மறுப்பு; சாலைகள் மூடல்’ – உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி #LiveUpdates

அயோத்தி புறப்பட்டார் பிரதமர் மோடி!அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் மோடி டெல்லியிலிருந்து தனி விமானத்தில் அயோத்தி புறப்பட்டார். 10.30 மணிக்கு லக்னோ வந்து அங்கிருந்து அயோத்தி வரவுள்ளார்.உச்சக்கட்ட...

இலங்கையில் எம்.பி-க்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்?

கொரோனாவால் இரண்டு முறை தள்ளிவைக்கப்பட இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக 2.17 கோடி மக்கள் தொகையைக் கொண்ட அந்த நாட்டில்,1.62 கோடிப்பேர் வாக்களிக்கத் தகுதியடையவர்களாக இருக்கிறார்கள். அதிகமான வாக்காளர்களை,...