முகப்பு சினிமா இருதய நோய்... தனி வில்லாவில் ட்ரீட்மென்ட்... ஆபத்தான நிலையில் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை?!

இருதய நோய்… தனி வில்லாவில் ட்ரீட்மென்ட்… ஆபத்தான நிலையில் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை?!

உலகம் முழுவதும் 176 நாடுகளைச் சார்ந்த பல லட்சம் மக்கள் Covid -19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்துள்ளார்கள். இதனால் உலகம் முழுவதும் கொரோனா அச்சத்தில் உறைந்துகிடக்க, ஒரே ஒரு நாடு மட்டும் அதுகுறித்த எந்த அலட்டலும் இல்லாமல் இருக்கிறது. அது வட கொரியாதான். இதுவரை அங்கு ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை என்று அந்நாடு சொல்லிவந்தாலும், அதை நம்ப எந்த நாடும் தயாராக இல்லை. காரணம், கிம் ஜாங் உன் என்ற இரும்புத்திரை மனிதன்தான். வழக்கம்போல இந்த கொரோனா விவகாரத்திலும் வடகொரியாவின் அதிபரான கிம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டுவருகிறது.

கிம் ஜாங் உன்

வடகொரியாவில் கொரோனா பாதிப்பு உள்ளது எனவும், ஆனால் அதை கிம் மறைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்கு பல லட்சம் பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என, சர்வதேச மருத்துவ நிபுணர்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த சர்ச்சை ஒருபுறம் இருக்க, தற்போது கிம்மின் உடல்நிலை மோசமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் வட கொரியா தத்தளிக்க, கடந்த 11-ம் தேதிக்குப் பிறகு கிம் மக்கள் முன் தோன்றவில்லை. அவர் எங்கோ மறைந்திருக்கிறார் எனக் கூறப்பட்டது.

Also Read: கொரோனா வைரஸ்: வடகொரியா நிலவரம்தான் என்ன?

கொரோனா தொற்று அச்சத்தால்தான் அவர் மறைந்திருக்கிறார் என்றும் பேசப்பட்டது. இதையொட்டி சில சந்தேகங்களும் எழுப்பப்பட்டன. வட கொரியாவை நிறுவியவரும் கிம்மின் தாத்தாவுமான கிம் இல் சங்கின் பிறந்தநாளை ஏப்ரல் 15 அன்று தேசிய விழாவாகக் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் இந்த விழாவில், இந்த ஆண்டு கிம் கலந்துகொள்ளவில்லை. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த வாரம் பல குறுகிய தூர ஏவுகணைகள் அந்நாட்டு சார்பில் ஏவப்பட்டது.

கிம் ஜாங் உன்

ஏவுகணை லாஞ்ச், எப்போதும் கிம்மின் கண்காணிப்பிலேயே நடத்தப்படும். ஆனால், இந்த முறை கிம் இதில் கலந்துகொள்ளவில்லை. இதுபோன்ற சந்தேகங்கள் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியது. ஆனால், தற்போது கிம்முக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், அவர் இருதய நோயால் அவதிப்படுகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வடகொரிய செய்திகளை பிரத்யேகமாக வெளியிடும் டெய்லி என்.கே நிறுவனம், இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

Also Read: `7 ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய கிம்மின் அத்தை; தலைமை மாற்றம்?!’ -வடகொரியாவை வட்டமிடும் அடுத்த மர்மம்

கடந்த ஆகஸ்ட் முதல் கிம் இருதயப் பிரச்னைகளுடன் போராடி வருகிறார் என்றும், அதைப் பொருட்படுத்தாமல் பலமுறை பேக்டு மலைக்குச் சென்றுவந்ததால், அவரின் உடல்நிலை மோசமடைந்தது என்றும் அந்தத் தகவலில் கூறப்பட்டுள்ளது. மேலும், அதிக புகைபிடித்தல், உடல் பருமன் மற்றும் அதிக வேலை காரணமாக அவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கிம் ஜாங் உன்

Also Read: கிம்மின் திக் திக்… குதிரை சவாரி! – பதற்றத்தில் வடகொரியா மக்கள்

இதற்கிடையே ஏப்ரல் 11-ம் தேதி, ஆளும் தொழிலாளர் கட்சியின் பொலிட்பீரோவின் கூட்டத்திற்குத் தலைமைதாங்கிய கிம், அதன்பின்னர் உடல்நிலை மோசமானதை அடுத்து மருத்துவமனைக்குப் புறப்பட்டார் என்றும், வடகொரியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஹியாங்சனின் மவுண்ட் கும்காங் ரிசார்ட் கவுண்டியில் உள்ள ஒரு வில்லாவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் அவருக்கு 12ம் தேதி அறுவை சிகிச்சை நடந்ததாக சிஎன்என் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தத் தகவல்கள் அனைத்தும் அதிகாரபூர்வ தகவல் இல்லை. எனினும் கொரியாவிற்கு இடையிலான விவகாரங்களைக் கையாளும் தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம், இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...