முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் இறந்தவரின் சடலத்தில் இருந்து கொரோனா தொற்று பரவுமா?

இறந்தவரின் சடலத்தில் இருந்து கொரோனா தொற்று பரவுமா?

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடலை தகனம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டு வரும் நிலையில், இறந்தவர்களின் உடலில் இருந்து கொரோனா பரவுமா என்று தெரிந்து கொள்ள அவசியம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பில் பொதுமக்கள் மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்களும் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.

அந்தவகையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சைக்கு பெற்று வந்த 60 வயதான மருத்துவர் ஒருவர் சென்னையில் உயிரிழந்துள்ளார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அவரது உடலை தகனம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டு பின்னர் அது சரி செய்யப்பட்டது.

இந்த நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நரம்பியல் சிகிச்சை நிபுணரான மருத்துவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடலை தகனம் செய்ய எடுத்து சென்ற போது அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தையும் தாக்கியுள்ளனர். அதன்பின்னர் வேறு ஒரு இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சரீர விலகலை கடைபிடிக்காமல் இருந்தது கூட்தல் கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

கொரோனா இடர்பாடுகளில் தங்களது குடும்பத்தினரை பிரிந்து, பரவும் தொற்று நோயையும் பொருட்படுத்தாமல் சேவையாற்றி வரும் அதே நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நிலையில், அவர்களது உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் மனிதாபிமானமற்ற செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை எவ்வாறு அடக்கம், தகனம் செய்ய வேண்டும் என்பது குறித்த வழிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், தமிழக சுகாதாரத்துறையும் வெளியிட்டுள்ளது. எனினும், மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதால் அது தொடர்பான விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது கவலையளிக்கும் வகையில் உள்ளது.

இந்த நிலையில், இறந்தவரின் சடலத்தில் இருந்து கொரோனா தொற்று பரவுமா என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். அதன்படி பொதுமக்கள் புரிந்து கொள்ளும் படியான எளிய விளக்கம் கீழே அளிக்கப்பட்டுள்ளது.

* கொரோனா தொற்று பரவ பிரதான காரணமாக இருப்பது, தும்மும் போதும், இருமும் போதும் நுன்துகள்கள் சிதறி பரவுவதுதான். இறந்தவர் தும்முவதோ, இருமுவதோ கிடையாது என்பதால் தொற்று ஏற்படாது.

* ஒருவர் இறந்ததும் அவரது உடலில் வைரஸ் தொற்று பல்கி பரவுவது நின்று போகும்.

* சடலத்டஹி எரிப்பதால், புதைப்பதால் தொற்று பரவாது. ஆழமான குழியை தாண்டி வைரஸ் மேலே ஏறி வராது. எரிக்கும் போது 4000 டிகிரி வெப்பத்தில் வைரஸ் உயிரோடு இருக்காது.

* புகையால் பரவாது.

* தோலில் வைரஸ் துகள்கள் இருக்கலாம், அப்படி இருந்தாலும் சடலத்தை தொடாத வகையில் வைரஸ் பரவாது. வழிகாட்டுதலின்படி, இறந்தவரின் உடலை தொட அனுமதி கிடையாது. அதனை சுகாதார ஊழியர்களே தகுந்த பாதுகாப்புடன் கையாள்வார்கள்.

எனவே, கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவரின் உடலை கண்ணியமான முறையில் வழியனுப்பி வைக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் உதவ வேண்டும்.

Must Read

யாழ் விடத்தற்பளை முகாமில் 51 கடற்படையினருக்கு கொரோனா: யாழ் மக்கள் அச்சம்

யாழ். கொடிகாமம் விடத்தற்பளை முகாமில் தனிமைப் படுத்தப்பட்ட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த 51 பேரும் கடற்படை சிப்பாய்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமில் 260 கடற்படை சிப்பாய்கள்...

உள்பக்கமாக பூட்டி பதுங்கிய அமெரிக்க பொலிசார்: வெடித்தது பெரும் கலவரம்

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியாகிய வீடியோ, இன்று அமெரிக்காவில் பெரும் கலவரத்தை உண்டாகியுள்ளது. கறுப்பின நபர் ஒருவரை வெள்ளையின பொலிசார் கைது என்ற போர்வையில் காலல் நசுக்கி கொலை செய்து இருந்த...

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் திமுகவினரின் மதுபான ஆலைகளும் மூடப்படும்: டி.கே.எஸ். சாமர்த்திய பதில்!!

எம்.பி.யான டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் குழு, தமிழக தலைமைச் செயலாளரை சமீபத்தில் சந்தித்தனர். திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ஒரு லட்சம்...

ப்ளஸ்2 மாணவர்களுக்கு போனஸ் மார்க், தேர்வுத்துறை உத்தரவு!

தமிழ்நாட்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட ஒரு பிழைக் காரணமாகக் குறிப்பிட்ட மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம்...

திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல – தேவஸ்தான நிர்வாகம் முடிவு

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக அளித்த 50 சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து...