முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் 'இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது'

‘இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது’

நாடாளுமன்ற இரு அவைகளின் செயலக அலுவலக பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றும் நாடாளுமன்ற அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.

இதன்படி, ‘நாடாளுமன்ற செயலக அலுவலகங்களில் இணைச் செயலாளர் நிலைக்கு கீழுள்ள அதிகாரிகளை காணவரும் ஓய்வுபெற்ற அதிகாரிகள், விருந்தினர்கள், பார்வையாளர்கள் ஆகியோர் இனி நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.

மறு உத்தரவு வரும்வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும். இந்த உத்தரவு கடுமையாக செயல்படுத்தப்படுவதை நாடாளுமன்ற செயலக உயரதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்’ என்று நாடாளுமன்ற பாதுகாப்புப் பணிகள் துறை இயக்குநர் பி.சி. ஜோஷி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.க்களின் பி.ஏ.க்களுக்கும் தடை: இதேபோன்று, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் (எம்பி) தனி உதவியாளர்கள் (பிஏ) நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் காலத்தில், எம்.பி.க்களின் தனி உதவியாளர்கள் 800-க்கும் மேற்பட்டோர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வந்துச் சென்றால், கொரோனாவின் காரணமாக நிலைமை மோசமாக வாய்ப்புள்ளது. எனவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

Must Read

தேர்தல் நேரத்தில் இந்துமதத்தை நேசிக்கும் சார்ள்ஸ்!

தேர்தல் நேரத்தில் இந்துமதத்தை நேசிக்கும் சார்ள்ஸ்; பேசும் படம்!

இப்போது 3 கோடி மொத்தம் 8 கோடி; சிவமோகனிடமிருந்து வன்னி மக்களை காப்பாற்ற கடவுள்தான் வரவேண்டும்!

தேர்தல் வருகிற ஆவணி மாதம் 5-ம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வவுனியாவில் தனது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்தபெண்ணை கற்பழித்த சி.சிவமோகன் தற்போதுவரை 3கோடியே 67 லட்ஷம் ரூபாய் வரை செலவளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,...

Corona Live Updates: `முதல்வருக்கு கொரோனா பரிசோதனை… ரிசல்ட் நெகட்டிவ்’ – தமிழக அரசு

முதல்வருக்கு நெகட்டிவ்:முதல்வர் எடப்பாடி பழனிசாமிதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாலும் அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...

விசாக பட்டினத்தில் பெரும் தீ விபத்து: பொது மக்கள் அச்சம்!

விசாகப்பட்டினம் பார்மா சிட்டியில் செயல்படும் விசாகா சால்வெண்ட்ஸ் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

சும்மா மெஜாரிட்டினு சொல்லாதீங்க; இதையும் செஞ்சு காட்டுங்க – ராஜஸ்தான் பாஜக!

ராஜஸ்தான் மாநிலத்தின் அரசியல் சூழல் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பாஜக முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.