முகப்பு சினிமா ``உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்!" - வீடியோ கான்ஃபரன்ஸில் என்ன பேசினார் மு.க.ஸ்டாலின்?

“உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்!” – வீடியோ கான்ஃபரன்ஸில் என்ன பேசினார் மு.க.ஸ்டாலின்?

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய ‘ஒன்றிணைவோம் வா’ என்ற செயல்திட்டத்தை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ -க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசி, தொகுதி, மாவட்ட நிலவரங்களை மு.க.ஸ்டாலின் கேட்டறிந்துவருகிறார்.

மு.க.ஸ்டாலின் என்ன பேசினார் என்று தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்ய, கட்சித் தலைமை 9073090730 என்ற செல்போன் நம்பர் ஒன்றை அறிவித்துள்ளது.

Also Read: `கோயம்பேட்டில் நேரடிக் கொள்முதல்; வீட்டுக்கு வீடு உதவி!’ – நெகிழவைத்த பட்டுக்கோட்டை தி.மு.க பிரமுகர்

ரங்கநாதன் எம்.,எல்.ஏ – வின் பதிவு

அந்த செல்போன் நம்பருக்கு வரும் அழைப்புகள் அடிப்படையில் பொதுமக்களுக்கு கட்சியினர் உதவி செய்துவருகின்றனர். இந்த உதவி செய்வதில் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியதுள்ளது. அதையெல்லாம் கடந்துதான் உதவிகளைச் செய்துவருகிறோம். அரிசி, மளிகைப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவினாலும், எங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறோம். அதை வீடியோ கான்ஃபரன்ஸின் போது மு.க.ஸ்டாலினிடம் சில நிர்வாகிகள் கூறினர். அதற்கு மு.க.ஸ்டாலின், இந்த இக்கட்டான நேரத்தில் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள் என்று கூறியதோடு, சிறப்பாகச் செயல்பட்ட நிர்வாகிகளை ஸ்டாலின் பாராட்டினார்” என்றனர்.

இதுகுறித்து வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. பா.ரங்கநாதனிடம் பேசினோம்.“கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து மு.க.ஸ்டாலின் எங்களுடன் ஆலோசனை நடத்தினார். ஊரடங்கு காரணமாக தினக்கூலி தொழிலாளர்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

பா.ரங்கநாதன் எம்.எல்.ஏ

வேலைக்குச் சென்றால்தான் சாப்பாடு என்ற நிலைமையில் இருப்பவர்கள் வறுமையில் வாடுகின்றனர். சாப்பிடக்கூட வழியில்லாமல் சிரமப்பட்டுவருகின்றனர். அவர்களுக்கு முடிந்த அளவுக்கு உதவி செய்துவருகிறோம். கட்சித் தலைமை அறிவித்த செல்போன் நம்பரில் உதவி தேவைப்படுவோர் தொடர்பு கொண்டால், அவர்களின் முகவரிகள் பெறப்படுகின்றன. பின்னர் அவை உடனடியாக அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. கட்சியினர், சம்பந்தப்பட்ட முகவரிக்குச் சென்று பொதுமக்களுக்கு உதவிகளைச் செய்துவருகிறோம்” என்றவரிடம், தமிழக அரசு வழங்கிய கொரோனா நிவாரண நிதி போதுமானதாக இல்லை என்று குற்றம் சாட்டுகிறார்களே? என்று கேட்டதற்கு, `மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து ரேஷன் கார்டுக்கு தலா 10,000 ரூபாய் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு 1,000 ரூபாய்தான் கொடுத்துள்ளது. இது, யானைப் பசிக்கு சோளப்பொரி என்றுதான் சொல்ல வேண்டும்’என்றார்.

வில்லிவாக்கம் தொகுதி எப்படியிருக்கிறது? என்று கேட்டதற்கு, `தொகுதியில் இதுவரை 2 பேருக்கு மட்டும்தான் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதி சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க சுகாதாரத்துறையினரும் காவல்துறையினரும் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் சேவை செய்துவருகின்றனர். அவர்களுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இன்ஸ்பெக்டரை கையெடுத்து கும்பிடும் எம்.எல்.ஏ

வில்லிவாக்கம் தொகுதியில், உதவி எனக் கேட்பவர்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறேன், தேவைக்கேற்ப உணவுப் பொருள்களைக் கொள்முதல் செய்யும் பணியும் நடந்துவருகிறது. காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்கள் சிறப்பாகப் பணியாற்றிவருகின்றனர். அதனால்தான், பணியில் ஈடுபட்டிருந்த வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டரை கையெடுத்து நான் கும்பிட்டேன்’ என்றார்.

Must Read

இந்தி நடிகை திவ்யா சவுக்சே: புற்றுநோயால் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் நடிகை திவ்யா சவுக்சே (28). நடிகையான பின்னர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் திவ்யா சவுக்சே வசித்து வந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் ஹை அப்னா...

வாழ்த்துங்களேன்!

14.7.20 முதல் 27.7.20 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத...

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...