முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் உங்க ஊருக்கு மழையா, வெயிலா? வானிலை ஆய்வு மையம் சொல்வதை கேளுங்க!

உங்க ஊருக்கு மழையா, வெயிலா? வானிலை ஆய்வு மையம் சொல்வதை கேளுங்க!

கோடை வெயில் வாட்டி எடுத்தாலும் சில இடங்களில் அவ்வப்போது சில இடங்களில் பெய்யும் மழை மக்கள் மனதில் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் அடுத்த இரு தினங்களுக்கு எங்கு மழை பெய்யும், எங்கு வெயில் வாட்டி எடுக்கும் என்பதை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தின் மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், சேலம், வேலூர், திருத்தணி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

சென்னையைப் பொறுத்தவரை காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் மாலை நேரங்களில் தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், தென்காசி ஆகிய இடங்களில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் ஆலையாறில் 2 சென்டி மீட்டரும், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Must Read

கர்ப்பிணி யானை செத்தது எப்படி? இறுதி அறிக்கை வெளியீடு!

கேரளா பாலக்காடு மாவட்டத்தில் அண்ணாச்சிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொலை செய்யப்பட்ட யானை எதனால் உயிரிழந்தது என சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கேரள அரசு அறிக்கை...

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா!!

சென்னையில் உடல்நலம் குறைவால் அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த நபரின்...

‘இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது’

நாடாளுமன்ற இரு அவைகளின் செயலக அலுவலக பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றும் நாடாளுமன்ற அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில அதிரடி...

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...

லொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக தமிழ் நாட்டு மக்களுக்கு பரிச்சயமானவர் . இலங்கையை சேர்ந்த அவர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் பிக்...