முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் 'உடனே அவங்க முகவரியை அனுப்புங்க'... முதல்வரின் கவனத்துக்கு சென்ற குடும்பத்தின் 'பசி'...

‘உடனே அவங்க முகவரியை அனுப்புங்க’… முதல்வரின் கவனத்துக்கு சென்ற குடும்பத்தின் ‘பசி’…

கொரோனாவை விட கொடியது ‘பசி’, இந்த வார்த்தையை கேட்கும் போது நமக்குள் ஏதோ ஒரு சோகம் ஏற்படுகிறது. காரணம், இந்த ஊரடங்கில் வேலையிழந்து, வருமானம் இழந்து, அத்தியாவசிய பொருட்களை பார்க்கமுடியாமல், கடன் கொடுக்க ஆளில்லாமல் எத்தனையோ குடும்பங்கள் பசி, பட்டினியோடு தவித்து வருகின்றன.

கொரோனா ஊரடங்கால் சென்னை மாநகரம் எப்படி உள்ளது, போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் நடந்து வரும் கூத்து என்ற செய்திகளை பார்த்து வந்து நாம் விருதுநகர் பக்கம் ஒரு குடும்பம் கண்ணீர் விட்டு கதறியதை பார்த்ததும் ‘இதல்லவா செய்தி’ என்ற எண்ணம் தோன்றியது.

பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வரும் பெண், தனது பிள்ளைகளுக்கு ஒரு வேலை கஞ்சி கொடுக்கவே முடியவில்லை என தனியார் நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த வீடியோவை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டேக் செய்த செய்தியாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் ‘ அவர்களின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பகிரவும். இதை எனது கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றி” என தெரிவித்தார். கொரோனா ஆட்டிப்படைக்கும் இப்பேரிடர் காலத்தில் முதல்வரின் டிவிட்டர் கணக்கிற்கு எண்ணற்ற கோரிக்கைகள் வருகின்றன.

அதில் மிக முக்கிய உதவிகளுக்கு உடனே பதில் வருவதும், அந்த கோரிக்கைகள் உடனே நிறைவேற்றப்படுவதும் தற்போது நெட்டிசன்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Must Read

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...

லண்டனில் 24 ம் திகதியோடு அமுலுக்கு வரும் கட்டாய முகக் கவசம்- மீறினால் FINE

பிரித்தானியாவில் இம்மாதம்(ஜூலை) 24 தொடக்கம் கட்டாய நடை முறை ஒன்று அமுலுக்கு வருகிறது. சூப்பர் மார்கெட் தொடக்கம், சிறு கடைகள், உணவங்கள் என்று மக்கள் கூடும் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் கட்டாய...

நச்சு, நச்சுனு கிஸ் அடிக்க மட்டும் தான் பீட்டர் பால் கேமராவுக்கு முன் வருவாரா?: தயாரிப்பாளர் ரவீந்தர்

வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை காதலித்து கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்த கையோடு பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி எலிசபெத்...