முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் உயிரிழப்புகளைப் பெருமளவு தடுத்தது ஊரடங்குதான்: மத்திய அரசு

உயிரிழப்புகளைப் பெருமளவு தடுத்தது ஊரடங்குதான்: மத்திய அரசு

பேரிடர்க்காலத்தில் மிகச்சிறந்த நடவடிக்கைகளில் ஒன்று ஊரடங்கு உத்தரவு என்பது மறுக்க முடியாதது. இந்த வகையில் ஊரடங்கால் ஏற்பட்ட நன்மைகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது ‘கட்டுப்படுத்தப்பட்ட பாதிப்பு எண்ணிக்கை ’ என்று மத்திய அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறிவித்துள்ள தரவின்படி, இந்தியாவில் எதிர்பார்க்கப்பட்ட கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 14 லட்சம் முதல் 29 லட்சம் வரை. அதே போல எதிர்பார்க்கப்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 37,000 முதல் 87,000 வரை. இன்றைய தேதி (23.05.2020) வரையிலும் இந்தியாவில் வைரஸ் பாதிப்பு நிலவரம் 1,25,101 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு 3,720 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இரண்டு கட்ட ஊரடங்குக் கால ஆய்வுகளின் அடிப்படையில் நிதி ஆயோக் அமைப்பின் சுகாதாரப்பிரிவு உறுப்பினர் வி.கே.பால் இந்தத் தரவுகளை வெளியிட்டார்.

இரண்டு பொருளாதார ஆய்வறிஞர்கள் கணக்கின்படி, 23லட்சம் பாதிப்புகளும் 68,000 உயிரிழப்புகளும் ஏற்படலாம் என்று கணித்திருந்தனர். அதேபோல, சில பேரிடர் ஆய்வாளர்கள் கணிப்பின்படி, “ 15.9 லட்சம் பாதிப்புகளும் 51,000 உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது” என்று கணித்திருந்தனர்.

அதேபோல இந்திய புள்ளியியல் துறையினர் கணித்திருந்ததன்படி, “ 20லட்சம் நோய்த்தொற்றுகளும் 54,000 இறப்புகளும் ஏற்படும் ” என்றும் கணிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், உண்மை நிலவரம் என்னவெனில், இந்த கணிப்புகளைப் பொய்யாக்கும் விதமாக இந்தியாவில் நோய்த்தொற்றும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் இருக்கின்றன. கொரோனாவைக் கையாளும் முறைகளில், இது இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் குறிப்பிடத்தக்க பலன் என்றும் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்தார்.

Must Read

யாழ் விடத்தற்பளை முகாமில் 51 கடற்படையினருக்கு கொரோனா: யாழ் மக்கள் அச்சம்

யாழ். கொடிகாமம் விடத்தற்பளை முகாமில் தனிமைப் படுத்தப்பட்ட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த 51 பேரும் கடற்படை சிப்பாய்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமில் 260 கடற்படை சிப்பாய்கள்...

உள்பக்கமாக பூட்டி பதுங்கிய அமெரிக்க பொலிசார்: வெடித்தது பெரும் கலவரம்

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியாகிய வீடியோ, இன்று அமெரிக்காவில் பெரும் கலவரத்தை உண்டாகியுள்ளது. கறுப்பின நபர் ஒருவரை வெள்ளையின பொலிசார் கைது என்ற போர்வையில் காலல் நசுக்கி கொலை செய்து இருந்த...

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் திமுகவினரின் மதுபான ஆலைகளும் மூடப்படும்: டி.கே.எஸ். சாமர்த்திய பதில்!!

எம்.பி.யான டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் குழு, தமிழக தலைமைச் செயலாளரை சமீபத்தில் சந்தித்தனர். திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ஒரு லட்சம்...

ப்ளஸ்2 மாணவர்களுக்கு போனஸ் மார்க், தேர்வுத்துறை உத்தரவு!

தமிழ்நாட்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட ஒரு பிழைக் காரணமாகக் குறிப்பிட்ட மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம்...

திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல – தேவஸ்தான நிர்வாகம் முடிவு

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக அளித்த 50 சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து...