முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் உலக வர்த்தக மையக் கொள்கைகளை மீறுகிறது இந்தியா: சீனா குற்றச்சாட்டு

உலக வர்த்தக மையக் கொள்கைகளை மீறுகிறது இந்தியா: சீனா குற்றச்சாட்டு

நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கைகளில் இந்தியா ஏற்படுத்திய திருத்தங்களால், உலக வர்த்தக மையத்தின் தடையில்லா வர்த்தகக் கொள்கைகளை இந்தியா மீறிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளது.

அண்மையில், அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை இந்தியா மாற்றியமைத்தது. இதன்படி, இந்திய நாட்டில் செயல்படும் நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டை மேற்கொள்வதற்கு அரசிடம் முன் அனுமதியைப் பெற வேண்டும் என நில எல்லையை பகிா்ந்து கொண்டுள்ள நாடுகளுக்கு இந்தியா புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

இந்தியாவின் இந்த புதிய விதிமுறை, உலக வா்த்தக அமைப்பின் தடையற்ற வா்த்தக கோட்டுபாடுகளை மீறுவதாக உள்ளது” என்று சீன தூதரக செய்தித் தொடா்பாளா் ஜி ரோங்க் தெரிவித்துள்ளார்.

மேலும், நியாயமான முறையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சுமுகமான வர்த்தக உறவு இருக்கும் இந்த வேளையில், இந்தியா இப்படி விதிமுறைகளை விதித்திருப்பதை இந்தியா மாற்றியமைக்கும் என்று சீனா நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Must Read

முள்ளிவாய்க்காலை கூட்டாக நினைவுகூர்தல் இனப்படுகொலைக்கான நீதிக்கு வலுச் சேர்க்கும் (Video)

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11 ஆவது ஆண்டு நினைவு கூர்தல் வடகிழக்கு தமிழ்மக்களின் தாயக பிரதேசங்களிலும் புலம்பெயர் நாடுகளிலும் மிகவும் அக்கறையோடு அனுட்டிக்கப்பட்டது. இந்த முள்ளிவாய்க்கால் தினம் பல வகைகளில் முக்கியத்துவம்...

சீன பொருட்கள் புறக்கணிப்பா? உண்மை நிலவரம் என்ன?

கொரோனா தொற்று முதன்முதலில் சீனாவில் பரவியதால் இந்தியாவில் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் சிலர் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்திய-சீன எல்லையில் இருதரப்பு ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் சீன...

பள்ளிகள் திறப்பு எப்போது? உத்தேச தேதிகளை வெளியிட்ட மாநில அரசு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்து வரும் சூழலில்...

அவசரக் கடன்: வாரி வழங்கிய ஸ்டேட் பேங்க்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்காக அவசரக்கால கடன் உத்தரவாதத் திட்டம் மத்திய அரசால் சென்ற மாதம்...

10,11,12 வகுப்பு மாணவர்களே.. ஹால் டிக்கெட் வாங்க ரெடியாகிடுங்க!!

பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்களது பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட்களை பெறலாம், www. dge.tn.gov.in என்று இணையதளத்திலும் மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து...