முகப்பு சினிமா `ஊரடங்கால் கேரளாவில் குறைந்துவரும் மாரடைப்பு..!’ - என்ன சொல்கிறார்கள் மருத்துவர்கள்?

`ஊரடங்கால் கேரளாவில் குறைந்துவரும் மாரடைப்பு..!’ – என்ன சொல்கிறார்கள் மருத்துவர்கள்?

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில் ஊராடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து, கேரளத்தில் 30 முதல் 50 சதவிகிதம் வரை மாரடைப்பு குறைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Corona

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்காக மருத்துவமனைகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஊரடங்கில் மாசு மற்றும் மனஅழுத்தம் குறைந்துள்ளது இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்று அம்மாநில இதயநோய் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில இதயநோய் மருத்துவர்கள், “இதய நோயாளிகளுக்கு, தீவிரமான உடல் உழைப்பின்போதும் கார் ஓட்டும்போதுமே மாரடைப்பு ஏற்படுகிறது. ஆனால், தற்போது இதய நோயாளிகளுக்கும் உடலுழைப்பு குறைந்துள்ளதால், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைந்துள்ளன.

மாரடைப்பு

இருப்பினும், நாடு முழுவதும் மாரடைப்பு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதற்கான உறுதியான காரணத்தை யாராலும் கூறமுடியாது.

மக்கள் தற்போது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்குத் திரும்பியுள்ளதும், துரித உணவுகளின் நுகர்வைக் குறைத்துள்ளதும் மாரடைப்பு குறைந்துள்ளதற்குக் காரணமாக இருக்கலாம். நோயாளிகள், சரியான நேரத்தில் உண்ணவும் உறங்கவும் செய்வதுடன், குறித்த நேரத்தில் மருந்துகளும் எடுத்துக்கொள்கின்றனர்” என்றும் தெரிவிக்கின்றனர்.

Also Read: கொரோனா யுத்தம்: பிரதமர் மோடி முதலிடம்!- `மார்னிங் கன்சல்ட்’ கருத்துக்கணிப்பு… மக்கள் கருத்து என்ன?

மற்றொருபுறம், ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு போக்குவரத்து இல்லாதது, மருத்துவமனைக்குச் சென்றால் கொரோனா தொற்று ஏற்படும் அச்சம் காரணமாகவும் அறிகுறிகள் ஏற்பட்டும் மருத்துவமனை செல்லாமல் தவிர்ப்பவர்களும் இருக்கலாம் என்கின்றனர்.

மாரடைப்பு

ஆனால், ஊரடங்கு முடிந்ததும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இதயநோய் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். “ஊரடங்கு காலத்தில் மாரடைப்பு மற்றும் இதய நோய்களுக்கான அறிகுறிகளை மக்கள் பெருமளவில் புறக்கணிக்க வாய்ப்புள்ளது. அதனால் பின்னாள்களில் இதயச் செயலிழப்பு ஏற்படலாம்” என்று எச்சரிக்கின்றனர்.

Must Read

தேர்தல் நேரத்தில் இந்துமதத்தை நேசிக்கும் சார்ள்ஸ்!

தேர்தல் நேரத்தில் இந்துமதத்தை நேசிக்கும் சார்ள்ஸ்; பேசும் படம்!

இப்போது 3 கோடி மொத்தம் 8 கோடி; சிவமோகனிடமிருந்து வன்னி மக்களை காப்பாற்ற கடவுள்தான் வரவேண்டும்!

தேர்தல் வருகிற ஆவணி மாதம் 5-ம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வவுனியாவில் தனது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்தபெண்ணை கற்பழித்த சி.சிவமோகன் தற்போதுவரை 3கோடியே 67 லட்ஷம் ரூபாய் வரை செலவளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,...

Corona Live Updates: `முதல்வருக்கு கொரோனா பரிசோதனை… ரிசல்ட் நெகட்டிவ்’ – தமிழக அரசு

முதல்வருக்கு நெகட்டிவ்:முதல்வர் எடப்பாடி பழனிசாமிதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாலும் அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...

விசாக பட்டினத்தில் பெரும் தீ விபத்து: பொது மக்கள் அச்சம்!

விசாகப்பட்டினம் பார்மா சிட்டியில் செயல்படும் விசாகா சால்வெண்ட்ஸ் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

சும்மா மெஜாரிட்டினு சொல்லாதீங்க; இதையும் செஞ்சு காட்டுங்க – ராஜஸ்தான் பாஜக!

ராஜஸ்தான் மாநிலத்தின் அரசியல் சூழல் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பாஜக முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.