முகப்பு செய்திகள் இலங்கை செய்திகள் ஊரடங்கின் போது மனைவிகளால் துன்புறுத்தப்படும் ஆண்கள்

ஊரடங்கின் போது மனைவிகளால் துன்புறுத்தப்படும் ஆண்கள்

இந்தியாவின் தமிழ்நாட்டிலும் ஊரடங்கால் வீட்டில் அடைபட்டு இருக்கும் ஆண்கள் சிலர் மனைவிகளின் பாரபட்சத்தால் சாப்பாட்டிற்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஆண்களுக்கு உதவும் வகையில் குறைந்த பட்சம் ஹெல்ப்லைன் எண்ணாவது அரசு வெளியிட வேண்டும் என்று ஆண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழக ஊடகமொன்றில் வெளியான செய்தி வருமாறு,

திருமணமோ, திருவிழாவோ சுதந்திர பறவைகளாக வீதியில் ஆடிப்பாடி உற்சாகமாக வலம் வந்த பல ஆண்கள் தற்போது வீட்டில் மனைவியின் பிடியில் சிக்கி சிறைப்பறவைகளாய் தவிக்கின்றனர். இதுவரை டிக்டாக்கில் மட்டுமே பார்த்த பல நகைச்சுவைகாட்சிகள் பல இல்லங்களில் அன்றாடம் அரங்கேறி வருகின்றது.

காலையில் எழுந்து மோட்டார் வாகனத்தை திருக்கிக் கொண்டு அலுவலகத்திற்கு பறந்த கைகள் இன்று பத்து பாத்திரங்களை தேய்த்து வருகின்றது. ஒரு காலத்தில் வீட்டு சாப்பாட்டில் கொஞ்சம் உப்பு குறைந்தால் கூட மாமனார் வீட்டிற்கு தலை தீபாவளிக்கு சென்ற புது மாப்பிள்ளை போல முறுக்கு காட்டிய ஆண்மகன்கள் பலர், ஊரடங்கால் ஹோட்டல்கள் பூட்டப்பட்டு உள்ளதால், உப்பே இல்லாமல் வீட்டில் போடப்படும் பத்திய சாப்பாட்டிற்கு பழகிக் கிடக்கின்றனர்.

மனைவியிடமும், குடும்பத்தினரிடமும் வேலைக்கு செல்வதாக வீராப்பு காட்டிய குடும்பதலைவர்கள் பலர் மனைவிக்கு பிடித்த பலகாரங்களை, யூடியூப்பை பார்த்து செய்து கொடுக்கும் சமையல் சக்கரவர்த்திகளாக மாறியுள்ளனர். இந்த நிலையில் தான் வீடுகளில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் பெருகி உள்ளதாக தேசிய பெண்கள் ஆணையம் ஒரு தகவலை தெரிவித்துள்ளது.

அதற்கு பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை குறித்து புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏடிஜிபி ரவியும் எச்சரித்துள்ளார். இதனை சுட்டிக்காட்டி வீடுகளில் அடிமைப்பட்டு சாப்பாட்டிற்கு கையேந்தும் சில ஆண்களுக்காக அபயக்குரல் கொடுத்துள்ளது ஆண்கள் பாதுகாப்பு சங்கம்.

அரசு பெண்களின் பாதுகாப்புக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது போல கொடுமைக்கார மனைவியர்களிடமிருந்து காப்பாற்றும் பொருட்டு குறைந்த பட்சம் பாதிக்கப்படும் ஆண்களுக்கான ஹெல்ப்லைன் எண்ணையாவது தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று முதல் அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வீட்டில் பெண்கள் செய்யும் வேலையை துச்சமாக எண்ணிய ஆண்கள் பலர், தங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு இவ்வளவு வேலை இருக்கின்றதா ? என்பதையே தற்போது தான் உணர தொடங்கி இருக்கின்றனர். இன்றைக்கும் தங்கள் கணவனை ராஜா போல உட்கார வைத்து பணிவிடைகள் செய்யும் பதிபக்தி மிக்க இல்லத்தரசிகள் தமிழகத்தில் ஏராளமாக உள்ளனர்.

அதே நேரத்தில் வீடே கதி என்று கிடக்கும் மனைவியை வாரம் ஒரு முறையாவது கட்டாயம் வெளியில் அழைத்துச் சென்று அவள் விரும்பியதை வாங்கிக் கொடுக்க வேண்டும், என்ற புரிதலையும் பல கணவன்மார்களுக்கு இந்த ஊரடங்கு உள்ளத்தில் பதிய வைத்திருக்கின்றது என்றால் அது மிகையல்ல.

The post ஊரடங்கின் போது மனைவிகளால் துன்புறுத்தப்படும் ஆண்கள் appeared first on jaffnavision.com.

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...