முகப்பு சினிமா ஊரடங்கில் ஏன் இப்படி வெளியில் விளையாடுகிறீர்கள்? - தட்டிக் கேட்ட தம்பிக்காக உயிரை விட்ட அண்ணன்

ஊரடங்கில் ஏன் இப்படி வெளியில் விளையாடுகிறீர்கள்? – தட்டிக் கேட்ட தம்பிக்காக உயிரை விட்ட அண்ணன்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். ஆனால் உத்தரவை மதிக்காத சிலர் வெளியில் சுற்றிவருகின்றனர். சென்னை பள்ளிக்கரணையை அடுத்த மேடவாக்கம் பெரியார் நகரில் சாலையில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

சடலமாகக் கிடக்கும் கிரி

Also Read: ஊரடங்கால் தனியாக சிக்கிய இளைஞர் வெட்டிக் கொலை! – ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய கும்பல் #Lockdown

அப்போது அவ்வழியாகச் சென்ற பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் லட்சுமணன் (18) என்பவர் சாலையில் விளையாடியவர்களிடம் ஊரடங்கு சமயத்தில் ஏன் விளையாடுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது விளையாடிக் கொண்டிருந்தவர்களுக்கும் லட்சுமணனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

பின்னர் விளையாடிக்கொண்டிருந்த சித்தார்த், அவரின் அண்ணன் சிவாவிடம் லட்சுமணன் தகராறு செய்த தகவலைக் கூறினார். உடனே சிவா மற்றும் அவரின் நண்பர் ஜானி ஆகியோர், லட்சுமணனிடம் விளையாடக்கூடாது என்று சொல்ல நீ யார் என்று கேட்டுள்ளனர். அதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பகலில் நடைபெற்ற இச்சம்பவத்தைத் தொடர்ந்து இரவு லட்சுமணனைத் தேடி அவரின் வீட்டிற்கு சிவா, ஜானி மற்றும் அவரின் நண்பர்கள் 10 பேர் சென்றுள்ளனர்.  அப்போது லட்சுமணன் வீட்டில் இல்லை.

கிரி என்கிற கிருபாகரன்

அதனால் அவரின் அண்ணன் கிரிதரன் என்கிற கிருபாகரன் (23) இருந்துள்ளார். அவரிடம் லட்சுமணன் எங்கே என்று சிவா கேட்டுள்ளார். அதற்கு கிரி, எதற்கு லட்சுமணனைத் தேடுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். உடனே, `தேவையில்லாமல் எங்கள் வழியில் தலையிட்டுவிட்டான். அதனால் அவனைத் தீர்த்துக்கட்ட போகிறோம்’ என்று சிவா தரப்பினர் கூறியதாகத் தெரிகிறது.

உடனே கிரிக்கும் சிவா தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் கிரியைச் சரமாரியாக வெட்டியுள்ளனர். அதைப்பார்த்த கிரியின் உறவினர் ஆனந்தன் அங்கு வந்துள்ளார். அதனால் அவருக்கும் வெட்டுக் காயம் விழுந்துள்ளது. இதையடுத்து சிவா தரப்பு அங்கிருந்து தப்பி ஓடியது.

Also Read: `மதுபோதையில் மனைவி, மகனை வெட்டிய தந்தை; கொலை செய்த மகன்!’ -சென்னையில் நடந்த கொடூரம் #Lockdown

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்ததும் பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் போலீஸார் அங்கு வந்தனர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கிரி மற்றும் ஆனந்தனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு கிரி உயிரிழந்தாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதனால் அவரின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக போலீஸார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கொலை செய்யப்பட்ட கிரி, மெக்கானிக்காக வேலை பார்த்துவந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திலிருந்து அரிவாள் ஒன்றையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள சிவா, ஜானி உட்பட 10 பேரைப் பிடிக்க இரண்டு தனிப்படைகளை அமைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு சமயத்தில் வீட்டின் அருகிலேயே மெக்கானிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் கொலைக்கு ஊரடங்கு மட்டுமல்ல கஞ்சா விற்பனை மோதல் என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள்.

Also Read: `மனைவி கொடுமையிலிருந்து தப்பிக்க ஹெல்ப் லைன் நம்பர்’ -ஊரடங்கில் முதல்வருக்குச் சென்ற புகார் மனு

கொலை

இதுதொடர்பாக நம்மிடம் பேசியவர்கள்,“பள்ளிக்கரணை பகுதியில் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்துவருகிறது. ஊரடங்கு காலகட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுவிட்டன. அதனால், கஞ்சா இந்தப்பகுதியில் வழக்கத்தை விட அதிகளவில் விற்கப்பட்டுவருகிறது. இந்தச் சமயத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக கஞ்சா வியாபாரிகளுக்குள் இடையே முன்விரோதம் இருந்துவந்துள்ளது. ஊரடங்கு சமயத்தில் எதற்காக வெளியில் விளையாடுகிறீர்கள் என்று கிரி தம்பி லட்சுமணன் கேட்டுள்ளார். ஏற்கெனவே கஞ்சா மோதல் இருந்து வந்த சூழலில் லட்சுமணன் தங்கள் தரப்பினரை தட்டிக் கேட்டு வாக்குவாதம் செய்ததால் அவரைக் கொலை செய்ய சிவா தரப்பு திட்டமிட்டது. அதற்காக லட்சுமணன் வீட்டுக்குச் சென்ற கும்பலிடம் அவரின் அண்ணன் கிரி சிக்கி உயிரிழந்துள்ளார்” என்றனர்

ஆனால் காவல் துறையினரோ ஊரடங்கு மோதல் என்று கூறிவருகின்றனர். இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் கொரோனா காரணமாக, சமீபத்தில்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு காலகட்டத்தில் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுவந்த சமயத்தில் இந்தக் கொலை நடந்தது அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...