முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் ஊரடங்கில் ரத்த தானம் செய்ய முன் வாருங்கள்...! சேவைக்காக காத்திருக்கிறோம்...

ஊரடங்கில் ரத்த தானம் செய்ய முன் வாருங்கள்…! சேவைக்காக காத்திருக்கிறோம்…

தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு மாநில ரத்த பரிமாற்று குழுமம் இணைந்து 90 அரசு ரத்த வங்கிகளை நிர்வகித்து வருகிறது. இந்த 90 அரசு ரத்த வங்கிகள் மூலம் சுமார் 4 லட்சம் ரத்த அலகுகள், ஒவ்வொரு ஆண்டும் தன்னார்வ செய்பவர்களிடம் சேகரிக்கப்படுகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் 33 ஆயிரம் ரத்த அலகுகள் தேவைப்படுகிறது. கொரோனா தொடர்பான விதிமுறைகள் காரணமாக, சாலை விபத்து, அவசரகால சிகிச்சைகள் மற்றும் பிற அறுவை சிகிசகிகள் குறைந்து இருப்பதால் ரத்த அலகுகளின் தேவை குறைந்துள்ளது.

ஆனால். தலசீமியா நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் ரத்தமாற்றம் தேவைப்படக்கூடிய மோசமான நோயாளிகளுக்கு ரத்த பரிமாற்றம் செய்ய ஒவ்வொரு வங்கியும் வழக்கமான தேவையில் 25 சதவீதம் ரத்த அலகுகள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

தமிழக அரசும் ரத்த வங்கியின் சேவைகளை அத்தியாவசியமான கோவிட் அல்லாத சேவைகளில் ஒன்றாக குறிப்பிட்டு, னைத்து மாநிலங்களிலும் அணைத்து ரத்த வங்கிகள் மற்றும் ரத்த சேமிப்பு அலகுகள் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ரத்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்த காலகட்டத்தில் ரத்த சேமிப்பு மற்றும் தன்னார்வ ரத்த தானம் தொடர்பான நடவடிக்கைகள் நியாயமான முறையில் தொடர வேண்டியது அவசியம்.

கொரோனா ஆலோசனைகளை பின்பற்றி மாவட்ட ஆட்சியர்களால் நடத்தப்பெறும் தன்னார்வ பொதுமக்கள் அனைவரும் முன் எப்போதும் போல ரத்ததானம் செய்யலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Must Read

வாழ்த்துங்களேன்!

14.7.20 முதல் 27.7.20 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத...

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...

லண்டனில் 24 ம் திகதியோடு அமுலுக்கு வரும் கட்டாய முகக் கவசம்- மீறினால் FINE

பிரித்தானியாவில் இம்மாதம்(ஜூலை) 24 தொடக்கம் கட்டாய நடை முறை ஒன்று அமுலுக்கு வருகிறது. சூப்பர் மார்கெட் தொடக்கம், சிறு கடைகள், உணவங்கள் என்று மக்கள் கூடும் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் கட்டாய...