முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் ஊரடங்கு: 16 கோடிப் பேருக்கு மத்திய அரசு நிதியுதவி!

ஊரடங்கு: 16 கோடிப் பேருக்கு மத்திய அரசு நிதியுதவி!

பீதியால் மார்ச் 24ஆம் தேதி உத்தரவு வெளியானபோது பொதுமக்களிடையே கொரோனாவைவிட மிகப் பெரிய அச்சம் ஏற்பட்டது. வேலை இல்லாமல் நிதி நெருக்கடி ஏற்பட்டு உணவுக்கே வழியில்லாமல் போகலாம் என்று மக்கள் தரப்பில் அஞ்சப்பட்டது. விவசாயம், சிறு தொழில், தினக் கூலி வேலைகளை நம்பியிருக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் இருந்த நிலையில், மத்திய அரசிடமிருந்து கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் பொருளாதாரச் சலுகைகள் வெளியிடப்பட்டன. ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள், மூன்று மாதங்களுக்கு தலா ரூ.1,000, ஜன் தன் கணக்கில் பெண்களுக்கு ரூ.500 எனப் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின.

இதன்படி, ஏப்ரல் 17ஆம் தேதி வரையில் பொதுமக்களுக்கு ரூ.36,659 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 16 கோடிப் பேர் பயன்பெற்றுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், மத்திய அரசின் நிதியுதவியில் செயல்படும் நலத் திட்ட உதவிகளின் கீழ் ரூ.27,442 கோடியும், மத்திய அரசின் நேரடி நலத் திட்ட உதவிகளின் கீழ் ரூ.9,717 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. பயனாளிகளைப் பொறுத்தவரையில் மத்திய அரசின் நிதியுதவியில் செயல்படும் நலத் திட்ட உதவிகளின் கீழ் 11.42 கோடிப் பேரும், மத்திய அரசின் நேரடி நலத் திட்ட உதவிகளின் கீழ் 4.59 கோடிப் பேரும் பயன்பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பெண்களுக்கான ஜன் தன் வங்கிக் கணக்குகளில் ரூ.500 வழங்கும் நடவடிக்கையில், ஏப்ரல் 13 வரையில் மொத்தம் 19.86 கோடிப் பெண்களுக்கு ரூ.9,930 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மொத்தம் 15 கோடிப் பேருக்கு ரூ.5,406 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் நலத் திட்ட உதவிகளைப் பொறுத்தவரையில், பீகார், உத்தரப் பிரதேசத்தில் 1.52 கோடிப் பயனாளிகளுக்கு ரூ.1,884.66 கோடி வழங்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் வயதானோருக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 53 லட்சம் பேருக்கு ரூ.707 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

Must Read

வாழ்த்துங்களேன்!

14.7.20 முதல் 27.7.20 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத...

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...

லண்டனில் 24 ம் திகதியோடு அமுலுக்கு வரும் கட்டாய முகக் கவசம்- மீறினால் FINE

பிரித்தானியாவில் இம்மாதம்(ஜூலை) 24 தொடக்கம் கட்டாய நடை முறை ஒன்று அமுலுக்கு வருகிறது. சூப்பர் மார்கெட் தொடக்கம், சிறு கடைகள், உணவங்கள் என்று மக்கள் கூடும் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் கட்டாய...