முகப்பு சினிமா `ஊருக்குப் போக வழி தெரியாத முதியவர்கள்; நாடோடிக் குழுக்கள்' - ஆச்சர்யம் அளித்த சென்னை தன்னார்வலர்கள்

`ஊருக்குப் போக வழி தெரியாத முதியவர்கள்; நாடோடிக் குழுக்கள்’ – ஆச்சர்யம் அளித்த சென்னை தன்னார்வலர்கள்

பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் பலவும் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாகப் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு இரண்டாவது முறையாக மே மாதம் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுப் போக்குவரத்தான பேருந்து, ரயில் உள்ளிட்ட சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் முடங்கியிருக்கிறார்கள். அவர்கள் பலர் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்தை நடந்தே கடந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் நிலையும் நீடித்து வருகிறது.

பெருநகரங்களில் தினசரி வேலையும் இல்லாமல் உண்ண உணவு, தங்க இடம் ஏதுமில்லாமல் நடைமேடைகளிலும் பேருந்து, ரயில் நிலையங்களிலும் ஏராளமான தொழிலாளர்கள் முடங்கியிருக்கிறார்கள். எந்தவித அடிப்படை வசதிகளின்றியும் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமலும் சிக்கியிருக்கும் தொழிலாளர்களின் நிலை வேதனைக்குரியது.

இந்தநிலையில், தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சொந்த ஊருக்குச் செல்லமுடியாமல் முடங்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு தினசரி இரண்டு வேளை உணவு கொடுத்து தன் நண்பர்களோடு கைகோத்து உதவி வருகிறார் சுரேஷ் என்ற தன்னார்வலர். ஒரு குழுவாக இணைந்து உணவு சமைத்து தாம்பரம் மெப்ஸ் புதிய பேருந்து நிலையம், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் தங்கியிருப்பவர்களுக்கு உணவு கொடுத்து வருகிறார் அவர்.

உதவி

சுரேஷிடம் பேசினோம். “ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடன், சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவ முடிவெடுத்தோம். அதன்படி நண்பர்கள் குழுவாக இணைந்து அவர்களுக்கு உணவு அளிக்கலாம் என்று முயற்சி எடுத்தோம். தாம்பரம் டிபி மருத்துவமனை, மெப்ஸ் பேருந்து நிலையம், ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரி எதிரிலிருக்கும் பேருந்து நிலையம் எனத் தாம்பரத்தைச் சுற்றிலும் பல்வேறு இடங்களில் இருக்கும் சுமார் 150 பேருக்கு தினசரி மூன்று வேளையும் உணவு கொடுக்கத் தொடங்கினோம்.

உதவிகள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்கள் அனைவருக்கும் எங்களால் தொடர்ந்து உதவி செய்ய முடியவில்லை. எங்களைப் போலவே தன்னார்வமாகப் பலரும் உதவி வருவதால், குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஊரடங்கு காலம் முடியும் வரையிலுமே இந்த உதவியைத் தொடரலாம் என முடிவெடுத்தோம்.

Also Read: `வெரைட்டி ரைஸ், வீட்டிலேயே சமையல்!’ – 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை

அதன்படி இப்போது, தாம்பரத்தைச் சுற்றிலும் பல்வேறு பகுதிகளில் இருக்கும் சுமார் 75 பேருக்கு தினசரி மதியம், இரவு என இருவேளைகள் உணவு வழங்கி வருகிறோம். அதேபோல், களத்தில் இருந்து பாதுகாப்புப் பணி மேற்கொள்ளும் போலீஸாருக்கு முறையாக உணவு கிடைப்பதில்லை. இதனால், சேலையூர் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் 40 பேருக்கு ஒருவாரமாக இரவு உணவு வழங்குகிறோம்.

உதவி

ஊரடங்கு காலம் தொடங்கி 30 நாள்களைக் கடந்திருக்கும் நிலையில் இன்றைய சூழலிலும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவிப்பதில் முக்கால்வாசிப் பேர் 50 வயதைக் கடந்தவர்கள். ஊரடங்கு தொடங்கியபோது இன்னும் அதிகமானோர் இப்படி சிக்கியிருந்தார்கள். அவர்களில் பலர் காய்கறி வாகனங்கள் மூலமாகவோ கிடைத்த வண்டியிலோ ஏறி சொந்த ஊர் நோக்கி பயணப்பட்டுவிட்டார்கள். ஆனால், இத்தனை நாள்கள் கழித்தும் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிக்கும் இந்த மக்களிடம் வங்கிக் கணக்கு உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. பெரும்பாலானவர்களிடம் செல்போன்கூட கிடையாது. திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஊருக்குச் செல்ல முடியாமல் தாங்கள் இருக்கும் இடங்களிலேயே அப்படியே முடங்கியவர்கள் பலர்.

தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் முத்து என்ற முதியவர் தங்கியிருக்கிறார். மதுரையைச் சேர்ந்த அவர், எப்படியாவது ஊருக்குப் போய்விடலாம் என்ற எண்ணத்தில் ரயில்வே ஸ்டேஷன் வந்திருக்கிறார். வந்தபின்னர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால் அப்படியே அங்கேயே தங்கிவிட்டார். திருவொற்றியூர் பக்கத்தில் ஏதோ இடத்தில் கூலி வேலை செய்து வந்திருக்கிறார் அவர். இருந்த சொற்பக் காசும் சில நாள்களில் முடிந்துவிடவே லாக்டௌன் முடிந்தால்தான் ஊருக்குப் போகலாம் என்ற சூழல் அவருக்கு.

அதேபோல், தாம்பரம் கேம்ப் ரோடு சிக்னல் பகுதியில் இருக்கும் ஒரு பிரபல பேக்கரி ஒன்றில் எலெக்ட்ரீஷியனாகப் பணிபுரிந்து வரும் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சொந்த ஊர் வேலூர். அவரும் சாப்பாடு வசதி எதுவுமில்லாமல் தவித்து வருகிறார். இவர்களுக்குக் கடந்த 20 நாள்களாக நாங்கள் உணவளித்து வருகிறோம்.

உதவி

பெருங்களத்தூர் பஸ் ஸ்டாண்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் இருந்தனர். அவர்களுக்கு இரண்டு, மூன்று நாள்கள் உணவு கொடுத்தோம். அதன்பின்னர், ஏதோ ஒரு வாகனத்தில் ஏறி அவர்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார்கள். அப்படி எந்தவித முயற்சியும் எடுக்க முடியாத வெகுளியான மக்களே இப்படி ஒரு மாதத்தைக் கடந்தும் முடங்கியிருப்பவர்கள்.

அதேபோல், அகரம் தென்பகுதியில் நாடோடி இனத்தைச் சேர்ந்த மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் எந்த வேலையும் இல்லாமல் முடங்கியிருக்கிறார்கள். அன்றாடங்காய்ச்சிகளான அவர்களுக்கு உணவு கிடைக்காமல் இருந்தது. அப்படி அவர்களது சூழலை அங்கிருந்த சிறுமி, வீடியோவாக எடுத்து வாட்ஸ் அப் குரூப்களில் அனுப்ப, அது எங்கள் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் இருக்கும் நண்பர்கள் உதவியோடு அவர்களுக்கு உதவினோம்.

Also Read: ` ஊரடங்கால் தடைபட்ட உதவி; கலங்கிய மனநலம் பாதித்தோர்!’ – களமிறங்கிக் கரம் கொடுத்த விகடன்

பெருங்களத்தூரில் ஆஸ்பெஸ்டாஸ் சீட் விற்பனை நிலையம் வைத்திருக்கும் தென்காசியைச் சேர்ந்த ராஜா என்ற நண்பர் லாக்டௌனால் முடங்கியிருக்கிறார். அவர் கடையில் வேலைபார்த்து வரும் நண்பர்களோடு தினமும் டாடா ஏஸ் வாகனத்தில் கோயம்பேடு சென்று காய்கறிகள் வாங்கி விற்பனை செய்துவருகிறார். தினசரி விற்பனை போக மீதமிருக்கும் காய்கறிகளை அப்படியே வந்து கொடுத்துவிடுவார். அதற்காக எந்தப் பணமும் அவர் வாங்குவதில்லை. இப்படி நண்பர்கள் சிலரின் உதவியால் எங்களால் தொடர்ந்து உதவ முடிகிறது. நான் ஒரு கட்சியில் பொறுப்பில் இருக்கிறேன். ஆனால், கட்சி சார்பாக இதையெல்லாம் செய்யவில்லை.

சுரேஷ்

நண்பர்கள் குழுவாக இணைந்தே மக்களுக்கு இதைச் செய்ய வேண்டும் என்று களமிறங்கினோம். சிட்லப்பாக்கத்தில் எனது வீடு இருக்கிறது. நண்பர்கள் இணைந்து தாம்பரம் அருகில் ஒரு இடத்தில் சமையல் செய்து அவர்களுக்குக் கொடுத்து வருகிறோம். நட்பு வட்டத்தில் சிலர் பணம், பொருள் கொடுத்து உதவுகிறார்கள். சிலர் களத்தில் இறங்கி உதவுகிறார்கள். அவர்களை ஒன்றிணைத்து இதைச் செய்துவருகிறோம். அரசு நினைத்தால் இவர்களை அருகிலுள்ள பள்ளி, கல்லூரியில் தங்க வைத்து உதவ முடியும்’’ என்றார் நெகிழ்ச்சியான குரலில்.

Must Read

தமிழர்களே ஜாக்கிரதை: இன்று லண்டனில் மகரந்த(பொலுன்) துகள் காற்றில் அதிகம்- அல்ர்ஜி வரலாம்

லண்டனிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் இன்று அளவுக்கு அதிகமாக பொலுன் என்று சொல்லப்படும் மகரந்த துகள்கள் காற்றில் அதிகமாக இருப்பதாக நுன் துகள் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. பலருக்கு இதனால் அலர்ஜி (ஒவ்வாமை)...

ஜல்ஜீரா முதல் பஜ்ஜிவரை… கொளுத்தும் வெயிலுக்கு கூலான நுங்கு ரெசிப்பீஸ்!

கோடைக்காலத்தின் குளுகுளு சுகங்களில் நுங்கு என்கிற ஐஸ் ஆப்பிளுக்கு முக்கிய இடமுண்டு. தினந்தோறும் சாப்பிட்டாலும் சலிக்காது. அதேபோல் பனங்காய்களைச் சீவி, நுங்கு அடிபடாமல் பதமாக எடுக்கிற லாகவமும் பார்க்கச் சலிக்காது. பனங்காயின் மேலே,...

`பாதிக்கப்படப்போவது நெசவாளர்களும்தான்!’ -மின்சாரத் திருத்தச் சட்டத்தால் கொதிக்கும் விவசாயிகள்

மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மின்திருத்தச்சட்டம் கார்ப்பரேட்களுக்காகக் கொண்டுவரப்படுகிறது. இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு அதற்கு, அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி ``மின் மோட்டாருக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து இறுதி அஞ்சலி...

`நாட்டின் முதல் நடமாடும் கொரோனா சோதனை மையம்..!’ – மகாராஷ்டிராவில் புதிய முயற்சி

கொரோனாவின் தாக்கம் நாளுக்குள்நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த ஆரம்ப நிலையிலேயே தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கொரோனாவின் தாக்கம் மற்ற நாடுகளில் உள்ள அளவுக்கு இந்தியாவில் இல்லை....

`புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது!’ – உச்ச நீதிமன்றம் உத்தரவு #NowAtVikatan

தொழிலாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது!உச்ச நீதிமன்றம்புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து ரயில் மற்றும் பேருந்துக் கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் உடனடியாக தங்களது சொந்த...