முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் எங்களை காப்பாத்துங்க... ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தல்!

எங்களை காப்பாத்துங்க… ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தல்!

கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்பிலிருந்து தொழில் சார்ந்தவர்களை காக்கும்படி தமிழக அரசுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயாளர் அன்பழகன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஆம்னி பேருந்து தொழில் ஏற்கெனவே பல காரணங்களால் நலிவடைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளால் ஆம்னி பேருந்துகள் இயக்க முடியாத காரணத்தால் தொழில் மேலும் நலிவடைந்துள்ளது.

இதனால், 1000 பேருந்து உரிமையாளர்கள், 50000 பணியாளர்கள் (ஓட்டுநர்கள், உதவியாளர்கள், பேருந்து பராமரிப்பவர்கள், கூலித் தொழிலாளர்கள், கிளார்க்குகள், அலுவலக பணியாளர்கள்) என மொத்தம் 51000 நபர்களும் அவர்களை சார்ந்த குடும்பங்களும் தமிழகத்தில் ஆம்னி பேருந்து தொழில் சார்ந்தவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் செய்துதரும்படி கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகளுக்கு அடுத்து வரும் காலாண்டிற்கு சாலை வரி செலுத்துவதற்கு போதுமான அளவு கால அவகாசம் வேண்டும். இதர மாநில உரிமம் பெற்று தமிழ்நாட்டில் சாலைவரி செலுத்தி இயங்கும் ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி செலுத்தி இயக்காத நாட்களுக்கு பதிலாக வரும் நாட்களில் இயக்க அனுமதிக்க வேண்டும்.

மேற்கூறிய உதவிகளை செய்து பொருளாதார பேராபத்தில் இருந்து ஆம்னி பேருந்து தொழிலையும், இத்தொழில் சார்ந்த உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என 51000 நபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களையும் காக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Must Read

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...

லண்டனில் 24 ம் திகதியோடு அமுலுக்கு வரும் கட்டாய முகக் கவசம்- மீறினால் FINE

பிரித்தானியாவில் இம்மாதம்(ஜூலை) 24 தொடக்கம் கட்டாய நடை முறை ஒன்று அமுலுக்கு வருகிறது. சூப்பர் மார்கெட் தொடக்கம், சிறு கடைகள், உணவங்கள் என்று மக்கள் கூடும் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் கட்டாய...

நச்சு, நச்சுனு கிஸ் அடிக்க மட்டும் தான் பீட்டர் பால் கேமராவுக்கு முன் வருவாரா?: தயாரிப்பாளர் ரவீந்தர்

வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை காதலித்து கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்த கையோடு பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி எலிசபெத்...