முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் எதுடா இன்டீசன்ட்டு, நீ பண்றதா, நான் பண்றதா?: தீயாக பரவும் எஸ்.ஜே. சூர்யா வீடியோ

எதுடா இன்டீசன்ட்டு, நீ பண்றதா, நான் பண்றதா?: தீயாக பரவும் எஸ்.ஜே. சூர்யா வீடியோ

நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் வந்த எஸ்.ஜே. சூர்யா இயக்குநர் ஆனார். அதன் பிறகு அவர் படங்களை இயக்குவதோடு நடிக்கவும் செய்கிறார். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் இசை. அதன் பிறகு கடந்த 5 ஆண்டுகளாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

வில்லனாக நடிக்கச் சொன்னால் மக்கள் அதை கதாபாத்திரம் என்பதை மறந்து திட்டி, சபிக்கும் அளவுக்கு நடிப்பார். அதே காமெடி செய்யச் சொன்னால் படம் பார்ப்பவர்களை விழுந்து, விழுந்து சிரிக்க வைப்பார். ஹீரோவாகவும் அசத்திக் கொண்டிருக்கிறார்.

நடிப்பதுடன் பாடவும் செய்வார், பாட்டு எழுதவும் செய்வார் எஸ்.ஜே. சூர்யா. அவர் எழுதி, தயாரித்து, இயக்கிய படத்தில் ஹீரோயின் மேல் சாஸ் கொட்ட அதை ஒருவர் துடைக்க எஸ்.ஜே. சூர்யாவுக்கு கோபம் வந்து திட்டுவார்.

எதிர்பார்க்காமல் சாஸ் கொட்டிவிட்டது அவன் துடைச்சான். இதை போய் ஏன் பெரிய விஷயமாக்குகிற என்று ஹீரோயின் கேட்க சூர்யாவோ ஏய், அவன் துடைக்கலடி தொட்டான் என்று கூறி அந்த நபர் மீது சாஸை கொட்டி பேசும் வசனம் அடங்கிய வீடியோவை ரசிகர்கள் நேற்றில் இருந்து சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.

2005ம் ஆண்டு ரிலீஸான படத்தில் வந்த வசன வீடியோவை ரசிகர்கள் தற்போது ஷேர் செய்வதை பார்த்த சூர்யா மகிழ்ச்சி அடைந்து அதை லைக் செய்துள்ளதுடன், நன்றியும் தெரிவித்து கமெண்ட் போட்டுள்ளார். சூர்யாவின் நடிப்பு அருமை, அவன் வசனம் பேசும் விதம் நன்றாக இருக்கிறது என்று ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Must Read

சச்சின் பைலட் பாஜகவில் இணையவில்லை: தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரா?

ராஜஸ்தான் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சச்சின் பைலட் பாஜகவில் இணையவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன

லன்டன் தோட்டங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் தப்பி ஓட்டம்: மரக்கறிகளில் கொரோனாவா ?

  ஹாட்பட்ஷியர் என்று சொல்லப்படும் பெரும், மாநகரில் உள்ள காய்கறிப் பண்ணையில், 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 4 பேர் தப்பியோடியுள்ளதாக அறியப்படுகிறது. வட்பேட், உள்ளடங்கலாக பல நகரங்களை உள்ளடக்கிய மாநிலமே ஹாட்பட்ஷியர்...

Swapna-வை சுற்றும் மர்மங்கள்… பறிபோகும் Pinarayi Vijayan பதவி?| Kerala Gold Smuggling

01:15 gold smuggling scandal2:52 CM removes his principal secretary04:13 Who is Swapna?06:05 Questioning Pinarai Vijayan10:50 Swapna Audio?

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது? (Video)

தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது? என்பது தொடர்பில் விளக்குகிறார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம். The post கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

`MASTER பிரமாண்டமா இருக்கு!’ – Review by Vijay Sethupathi | Lokesh Kanagraj | Anirudh

04:45 Master Trailer 05:43 Cinema Experience 08:40 Telugu Villain11:24 Allu Arjun Pushpa12:39 Muttiah Muralitharan Biopic13:34 Body Language15:28 Rajini & Chiranjeevi 17:50 Vimal Friendship19:15 Being...