முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் எனக்கு தெரியாமல் ரூ. 15 லட்சம் சுட்டுட்டார்: நடிகர் மீது பிக் பாஸ் பிரபலம் புகார்

எனக்கு தெரியாமல் ரூ. 15 லட்சம் சுட்டுட்டார்: நடிகர் மீது பிக் பாஸ் பிரபலம் புகார்

படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ரஷமி தேசாயும், நடிகர் அர்ஹான் கானும் காதலித்தார்கள். அர்ஹானுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது தெரிந்ததும் ரஷமி அவரை விட்டு பிரிந்தார்.

இந்நிலையில் ரஷமியின் வங்கிக் கணக்கில் இருந்து அவருக்கு தெரியாமல் ரூ. 15 லட்சம் எடுத்ததாக அவரின் ரசிகர்கள் ஆதராத்துடன் ட்விட்டரில் குற்றம் சாட்டினார்கள். இது குறித்து கூறியிருப்பதாவது,

நான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது எனக்கு தெரியாமல் இந்த பண பரிவர்த்தனை நடந்துள்ளது. நான் வெளியே வந்த பிறகு அது குறித்து அறிந்ததும், பண பரிவர்த்தனை குறித்த ஸ்க்ரீன்ஷாட்டை என் நிதி நிர்வாகத்தை கவனித்து வருபவர் மற்றும் சிலரிடம் ஷேர் செய்தேன்.

ரூ. 15 லட்சம் போக அர்ஹான் எனக்கு மேலும் பணம் தர வேண்டியுள்ளது. ஆனால் பண வரித்தனை நடந்த ஸ்க்ரீன்ஷாட்டை யார் சமூக வலைதளத்தில் கசியவிட்டது என்று தெரியவில்லை.

நான் லீக் செய்வதாக இருந்தால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து இரண்டு மாதங்கள் வரை ஏன் காத்திருக்க வேண்டும். அர்ஹான் விஷயத்தில் நான் எதுவும் செய்ய விரும்பவில்லை. இந்த சம்பவம் என்னை மனதளவில் மிகவும் பாதித்துள்ளது என்றார்.

Must Read

கர்ப்பிணி யானை செத்தது எப்படி? இறுதி அறிக்கை வெளியீடு!

கேரளா பாலக்காடு மாவட்டத்தில் அண்ணாச்சிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொலை செய்யப்பட்ட யானை எதனால் உயிரிழந்தது என சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கேரள அரசு அறிக்கை...

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா!!

சென்னையில் உடல்நலம் குறைவால் அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த நபரின்...

‘இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது’

நாடாளுமன்ற இரு அவைகளின் செயலக அலுவலக பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றும் நாடாளுமன்ற அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில அதிரடி...

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...

லொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக தமிழ் நாட்டு மக்களுக்கு பரிச்சயமானவர் . இலங்கையை சேர்ந்த அவர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் பிக்...