முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் என் குரல் போலவே இருக்கு அடப் பாவிகளா! மீம்ஸ் கிரியேட்டர்களை பாராட்டிய விவேக்

என் குரல் போலவே இருக்கு அடப் பாவிகளா! மீம்ஸ் கிரியேட்டர்களை பாராட்டிய விவேக்

நடிப்பில் வெளியான பார்த்திபன் கனவு படத்தில் வரும் காமெடி காட்சியில் அவர் பேசிய வசனத்தை கொஞ்சம் உல்டா செய்து, கொரோனா விழிப்புணர்வுக்காக மீம் உருவாக்கியுள்ளனர். அதை விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

வீடியோவில் விவேக், தனது மனசாட்சியிடம் பேசுவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

ச்ச.. சும்மா இருக்குறது எவ்ளோ கடுப்பா இருக்கு.. எல்லாரும் போன்ல பேசுறாங்க. நா என்கிட்டயே பேசப்போறேன்.

ஏய் நீ ரொம்ப அழகா இருக்க.. வீட்ல இருக்க செம்ம காண்டா இருக்கு. நா வேண்ணா வெளிய போயி ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வரட்டுமா?

ஆமா எதுக்குடா லாக்டவுன் – என்று மனசாட்சி பேசுகிறது.

கொரோனா பரவலைத் தடுக்க எல்லாரையும் வீட்லயே இருக்க சொல்லிருக்காங்க. என்ன நா போயிட்டு வரட்டுமா

போகாத.. போகாத.. என மனசாட்சி சொல்கிறது.

அப்டிதான்டா போவேன்.. போனா என்ன ஆகும்.

அவரது புகைப்படத்துக்கு மாலை இட்டு, ஊதுவத்தி கொழுத்தி, பழங்கள் படையலிடப்பட்டிருப்பது போல காட்டப்படுகிறது.

ஆஹா… கொரோனா போனாதுக்கு அப்றமே வெளிய போய்க்கலாம்..

இதை பகிர்ந்துள்ள விவேக் மீம்ஸ் கிரியேட்டர்களை பாராட்டியுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது,

மீம்சு பசங்க சூப்பர்! கிட்ட தட்ட என் குரல் போலவே இருக்கு!!!! அடப் பாவிகளா

என கூறியுள்ளார் விவேக்.

இந்த பதிவுக்கு கீழ் பலரும் இந்த மீம் வீடியோவை பாராட்டியுள்ளனர். சூப்பர் மீம், நீங்களும் திரைப்படங்களில் கருத்து சொல்வீர்கள். இவர்களும் உங்களை பயன்படுத்தி கருத்து சொல்லியிருக்கிறார்கள் என பலர் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சிலர் அவரது பஞ்ச் வசனமான அடப்பாவிகளா என கமெண்ட் செய்துள்ளனர்.

Must Read

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!  

அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்றை அனுப்பினார் ரம்: பொறிஸ் ஜோன்சன் மருத்துவர்

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில், செயற்கை சுவாத்தோடு இருக்கும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. அமெரிக்க அதிபர் டொனால் ரம்...

நிபுணர்களின் கருத்துப்படி ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு ? – அரசு வட்டாரத் தகவல்

ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கபட உறுதியான வாய்ப்புகள் இருப்பதாக அரசுத் தரப்புத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை நாடு...

ஊரடங்கில் பள்ளி மாணவி கர்ப்பம்…! காட்டிக்கொடுத்த தங்கை கொலை…

கொசவம்பட்டியைச் சேர்ந்த சந்திரன் - வத்சலா தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருந்தனர். முதல் மகள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த நிலையில் இரண்டாவது மகள் அப்பகுதியில் உள்ள...

கொரோனாவுக்கு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கொரனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி பயன்படுத்திக் கொள்ளப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள்...