முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஜாம்பவான்களுடன் போட்டி போடும் ஓலா!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்… ஜாம்பவான்களுடன் போட்டி போடும் ஓலா!

நெதார்லாந்து நாட்டைச் சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனமான எடெர்கோவை நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. எனினும், என்ன தொகைக்கு நிறுவனத்தை வாங்கியது என்பது பற்றிய தகவல்களை ஓலா நிறுவனம் வெளியிடவில்லை. இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த ஏற்கெனவே ஓலா திட்டமிட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக தற்போது எடெர்கோவை விலைக்கு வாங்கியுள்ளது.

இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகன துறையில் ஹீரோ, பஜாஜ் போன்ற ஜாம்பவான்களுடனும், ஏதெர் எனெர்ஜி போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடனும், சீன நிறுவனங்களுடனும் போட்டியிட ஓலா திட்டமிட்டுள்ளது. எடெர்கோ நிறுவனம் வடிவமைத்துள்ள் ஆப்ஸ்கூட்டர் வாகனம் அதிக திறன் கொண்ட பேட்டரியுடன் 240 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடியது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்களுக்காக நாடு முழுவதும் சார்ஜிங் நிலையங்கள், பேட்டரி மாற்றும் நிலையங்களை ஓலா நிறுவனம் ஏற்கெனவே அமைக்கத் தொடங்கிவிட்டது. சர்வதேச இரு சக்கர வாகன சந்தையின் அளவு 10 கோடி யூனிட்கள் எனவும், இந்திய சந்தையின் அளவு 2 கோடி யூனிட்கள் எனவும் ஓலா நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து ஓலா நிறுவனத்தின் துணை நிறுவனர் பாவிஷ் அகர்வால், “உலகம் முழுக்க ஒவ்வொரு ஆண்டும் விற்பனையாகும் கார்களை காட்டிலும் இருசக்கர வாகனங்கள் இருமடங்கு விற்பனையாகின்றன. டிஜிட்டல் இணைப்பு, எலெக்ட்ரிக் இயக்கம் போன்றவற்றால் உலகம் முழுக்க நகர்ப்புற மக்கள் இருசக்கர வாகனங்களில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஓலா நிறுவனத்தில் கடந்த ஆண்டில் சாஃப்ட்பேங்க் 25 கோடி டாலர் முதலீடு செய்தது. இதைத்தொடர்ந்து ஓலா நிறுவனத்தின் மதிப்பு 100 கோடி டாலராக உயர்ந்தது. கேப் சேவைகளை மேற்கொண்டு வந்த ஓலா நிறுவனம் திடீரென வாகன உற்பத்தியில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளது.

Must Read

தேர்தல் நேரத்தில் இந்துமதத்தை நேசிக்கும் சார்ள்ஸ்!

தேர்தல் நேரத்தில் இந்துமதத்தை நேசிக்கும் சார்ள்ஸ்; பேசும் படம்!

இப்போது 3 கோடி மொத்தம் 8 கோடி; சிவமோகனிடமிருந்து வன்னி மக்களை காப்பாற்ற கடவுள்தான் வரவேண்டும்!

தேர்தல் வருகிற ஆவணி மாதம் 5-ம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வவுனியாவில் தனது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்தபெண்ணை கற்பழித்த சி.சிவமோகன் தற்போதுவரை 3கோடியே 67 லட்ஷம் ரூபாய் வரை செலவளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,...

Corona Live Updates: `முதல்வருக்கு கொரோனா பரிசோதனை… ரிசல்ட் நெகட்டிவ்’ – தமிழக அரசு

முதல்வருக்கு நெகட்டிவ்:முதல்வர் எடப்பாடி பழனிசாமிதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாலும் அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...

விசாக பட்டினத்தில் பெரும் தீ விபத்து: பொது மக்கள் அச்சம்!

விசாகப்பட்டினம் பார்மா சிட்டியில் செயல்படும் விசாகா சால்வெண்ட்ஸ் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

சும்மா மெஜாரிட்டினு சொல்லாதீங்க; இதையும் செஞ்சு காட்டுங்க – ராஜஸ்தான் பாஜக!

ராஜஸ்தான் மாநிலத்தின் அரசியல் சூழல் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பாஜக முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.