முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் 'ஏங்க வீடியோ எடுக்குறாங்க'... லைசன்ஸ் கேட்ட போலீசிடம் 'லா' பேசிய கணவர்...

‘ஏங்க வீடியோ எடுக்குறாங்க’… லைசன்ஸ் கேட்ட போலீசிடம் ‘லா’ பேசிய கணவர்…

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது, இதனால் அத்தியவாசிய பொருட்கள் வாங்க மட்டும் பொதுமக்கள் வெளியில் வர அனுமதிக்கபடுகின்றனர்.

குறிப்பாக வாகனத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்க ஒருவர் மட்டுமே வரவேண்டும் என காவல்துறை அறிவித்துள்ளது. அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பகுதியை சேர்ந்த இளம் தம்பதியினர் 144 தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த இளம் தம்பதியினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

டூ வீலரில் ஒருவர் மட்டுமே வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தியுள்ளனர். பின்னர் அவரிடம் லைசன்ஸ் கேட்கப்பட்டுள்ளது.

ஆனால் அதற்குள் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் உண்டாகி அசம்பாவிதம் ஏற்படும் நிலை ஏற்பட்டதால், அங்கு இருந்த வாகன ஓட்டிகள் சமாதானப்படுத்தி அந்த நபரையும், மனைவியையும் அனுப்பி வைத்தனர்.

Must Read

நாளை ராமர் கோவில் பூமி பூஜை – பிரதமர் மோடி பயணத்தின் முழு விவரம்!

முதலில் ஹனுமன் கார்ஹியில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி பின்னர் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கிறார்.

கணவன் கண் முன்னே கூட்டு பாலியல், ஆதரவு அளித்த போலீஸ்!

பாலியல் குற்றவாளிகளுக்கு போலீஸ் ஆதரவு அளித்து புகாரைப் பெற மறுத்து வந்த நிலையில், மலைவாழ் மக்கள் கூட்டாக முன்னெடுத்த போராட்டம் குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது...

“உடம்பெல்லாம் வலிக்குதுப்பான்னு அவன் அழறப்போ பயமா இருக்கும்”-  கண்ணீரில் மிதக்கும் சென்னை குடும்பம்!

மருந்தில்லா நோயும் வறுமையும் ஒரு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தால்..? பூந்தமல்லியை அடுத்த செந்நீர் குப்பத்தைச் சேர்ந்த ரவீந்திரன் குடும்பம்போலதான் இருக்கும். எதிர் எதிரே இரண்டு பைக்குகள் வந்துவிட்டால், ஒரு வண்டி நின்றுதான் போக...

ஆபாசம், அச்சுறுத்தல், கொலை மிரட்டல்… பெண் ஊடகவியலாளர்களை குறிவைக்கும் கும்பல்!

தமிழ்நாட்டில் ஊடகத்தினர் மீதான தாக்குதலில் `சீஸன் டூ' ஆரம்பித்திருக்கிறது. ஊடகத் துறையில் இயங்கிவரும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து சமீபகாலமாக அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்களில் இதுதொடர்பான குற்றச்சாட்டுகள், விவாதங்கள் என இரு...

TikTok-ஐ வாங்க மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை… வாங்கினால் இந்தியாவில் என்ன செய்யலாம்? #VikatanPoll

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவைப் போலவே டிக்டாக் app-ஐ தடைசெய்யவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதே சமயம், அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட், டிக்டாக் app-ஐ சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்...